»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் வையாபுரிக்கு சென்னை வடபழனி கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகோலாகலமாக நடந்தது.

தமிழ் திரைப்பட உலகில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகாரக திகழ்பவர் வையாபுரி. இவர் 60-க்கும் மேற்பட்டபடங்களில் நடித்துள்ளார். இவர் தனது திருமணத்திற்காக பெண் தேடி வந்தார். ஆனால் ஏற்ற பெண்கிடைக்கவில்லை.

இந்நிலையில் என்னவளே திரைப்பட இயக்குனர் சுரேஷின் தாய் மூலம் வையாபுரிக்கு, தாராபுரத்தை சேர்ந்தஆனந்தவல்லி என்ற பெண் கிடைத்தார். இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வடபழநி முருகன்கோவிலில் திருமணம் நடந்தது.

நடிகர் விஜயகாந்த் நேரில் வந்து தம்பதிகளை வாழ்த்தினார். இருவருக்கும் அவர் தங்க மோதிரம் பரிசு வழங்கினார்.இயக்குநர் மணி ரத்னம், நடிகர்கள் வினு சக்ரவர்த்தி, தாமு, சார்லி, சாப்ளின் பாலு. சக்திகுமார் உள்ளிட்ட பலதிரைப்பட நடிகர், நடிகைகள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Read more about: chennai cinema tamilnadu vaiyapuri

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil