»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிரிப்பு நடிகர் வையாபுரிக்கும், தாராபுரத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

காதல் பள்ளி என்ற தமிழப்படம் மூலம் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தவர் வையாபுரி. அதைத்தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், ஹேராம்,என்னவளே, ராமன் அப்துல்லா உள்பட 60 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து விட்டார் இவர்.

இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் இவருக்கு நல்ல பிரேக் கொடுத்த படம். இதற்கிடையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கடந்த 2வருடங்களாகப் பெண் தேடி வந்தார் வையாபுரி. இவருக்குத் தற்போது பெண் கிடைத்து விட்டது.

தாராபுரத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்துப் பெண்ணான ஆனந்தி என்ற பெண்ணை மணக்கிறார். ஆனந்தி ப்ளஸ் டூ வரைப் படித்திருக்கிறார். வரும் 19 ம் தேதிவையாபுரிக்கும், ஆனந்திக்கும் சென்னையில் திருமணம் நடக்கிறது.

திருமணத்தைப் பற்றி வையாபுரி கூறுகையில், சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டு மிகவும் பிசியாக இருக்கிறேன். என் திருமணம்வடபழனி முருகன் கோவிலில் நடக்கும். திருமணம் முடிந்ததும் அனாதை குழந்தைகளின் இல்லத்துக்குச் சென்று அவர்களுக்கு விருந்து வைக்கிறோம்.மாலையில் சின்னதாக ஒரு வரவேற்பு என்றார் வையாபுரி.

Read more about: actor, commedy, fixed, vaiyapuri

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil