»   »  கல்வியின் முக்கித்துவம் வலியுறுத்தும் வஜ்ரம்... அஜித் படத்தோடு மோதுகிறது!

கல்வியின் முக்கித்துவம் வலியுறுத்தும் வஜ்ரம்... அஜித் படத்தோடு மோதுகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துடன் வெளழியாகிறது வஜ்ரம் படம்.

ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக பி ராமு தயாரித்துள்ள படம் இது. இந்தப் படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

பவானி ரெட்டி

பவானி ரெட்டி

கதாநாயகியாக பவானி ரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் எஸ் டி ரமேஷ்செல்வன்.

ரமேஷ் செல்வன்

ரமேஷ் செல்வன்

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "இது முழுக்க முழுக்க கல்வியை மையமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. கல்விதான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தையும், ஒரு நாட்டின் முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியம்.

கல்வி

கல்வி

அடுத்த தலைமுறைகள் சிறப்பாக அமையவேண்டுமானால் அதற்க்கு கல்வி மிகவும் அவசியம். அப்படிப்பட்ட கல்விக்காக போராடும் நான்கு சிறுவர்களின் கதைதான் இது.

மனிதனுக்கும் கல்வி அவசியம் என்ற கொள்கையோடு தான் வாழ்நாளை அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் தன்னை அர்ப்பணித்து, அனாதைகளாய் கிடந்த நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை தத்தெடுத்து அவர்களோடு ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் தம்பிராமையா எதிர்களால் அப்பள்ளி அபகரிக்க படுகிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

மாணவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து எப்படி எதிரியிடம் போராடி தம்பிராமையாவையும், பள்ளியையும் மீட்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இந்த நான்கு பையன்களும் மிக இயல்பாக நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு அச்சன்கோவில், மூணாறு, சாலக்குடி, அஸ்ஸாம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்," என்றார்.

பிபி 6-ம் தேதி

பிபி 6-ம் தேதி

படம் வருகிற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாகப் போகிறதாம். 5-ம் தேதி அஜீத்தின் என்னை அறிந்தால் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Ramesh Selvan's Vajram movie is going to release on Feb 6th all over the state.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil