Don't Miss!
- News
ட்விஸ்ட்.. எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசுவின் வேட்புமனு தாக்கல் ஒத்திவைப்பு.. ஏன்? என்ன நடந்தது?
- Automobiles
இன்னோவாலாம் இனி வேஸ்ட் இனிமே இந்த கார்தான் பெஸ்ட்னு நினைச்சுட்டாங்க போல! புக்கிங் கண்ட மேனிக்கு குவியுது
- Technology
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காதலை கொண்டாடும் தருணங்கள்... காதலை கொண்டாட வைத்த திரைக்காவியங்கள்!
சென்னை : இன்றைய தினம் காதலர் தினம் உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலை கொண்டாடுவதற்கு தனியாக ஒரு நாள் தேவையில்லை என்றாலும் இந்த தினத்தை சிறப்பான காதல் தினமாக கொண்டாடி மகிழலாம்.
காதல் கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு சிறப்பான வகையில் திரைப்படங்கள் கொடுத்து வருகின்றன.
9 ஆண்டுகளுக்கு பிறகு டைரக்ஷனில் அமீரின் ரீ என்ட்ரி... டைட்டில் என்ன தெரியுமா ?

சிறப்பான காதல் அனுபவம்
காதல்... அனுபவித்தவர்களுக்கும், அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை தந்துக் கொண்டிருப்பது. காதலில் வெற்றிப் பெற்றவர்களை விட தோல்வி அடைந்தவர்களுக்கே சிறப்பான அனுபவத்தை தந்துக் கொண்டிருக்கும். என்ன அந்த தோல்வி கொடுக்கும் வலி என்பது நாம் வாழும் வரை மறையாது.

காதலர் தினம்
காதல் என்பது தினந்தோறும் அனுபவிக்க வேண்டியது. அதற்கென ஒரு நாளை கொடுத்து அந்த நாளில் அனுபவித்துக் கொள்ளுங்கள் என்று வரையறை படுத்துவது நல்லதல்ல. என்றாலும் பிறந்தநாள், திருமண நாள் போல இந்த நாளையும் சிறப்பாக்கிக் கொள்ளலாம்.

காதல் குறித்த பார்வை
காதலர் தினத்தில் காதலைப் பற்றிய பார்வை என்பது சிறப்பானதுதான். அதிலும் காதலை எப்போதுமே நாம் கொண்டாட்டத்தில் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் திரைப்படங்களைப் பற்றிய பார்வையை நாம் தற்போது மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

பேசும் படங்களில் காதல்
திரைப்படங்களின் துவக்கமாக காணப்படும் பேசும் படங்களில்கூட காதல் இருந்தது. ஆனால் அது நாசூக்காக இருந்தது. தொடர்ந்து பாகவதர் கால படங்கள், எம்ஜிஆர் -சிவாஜி, கமல் -ரஜினி, விஜய் -அஜித் முதல்கொண்டு தற்போது இளம் தலைமுறைகள் வரை காதல் படங்கள் பல்வேறு பரிணாமங்களை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போது சில காதல் படங்கள் மற்றும் அது ரசிகர்களிடையே ஏற்படுத்திய தாக்கங்களை பார்க்கலாம்.

நெஞ்சம் மறப்பதில்லை
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் காதல் காவியமாக அமைந்த படம் நெஞ்சம் மறப்பதில்லை. காதல் ஜென்மங்களை தாண்டி நீடிக்கும் என்பதை கருவாக கொண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முன் ஜென்ம நியாபங்களை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் வித்தியாசமான திரைக்கதையால் புகழப்பட்டது.

காதலின் பரிணாமம்
இதேபோல காதலின் மற்றொரு பரிணாமத்தை காட்டிய படம் வசந்த மாளிகை... அந்தஸ்தை மீறிய காதலும் அதன் போக்கும் இந்தப் படத்தில் அழகாக காட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து பாலசந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன் கதை சகோதரிகளின் நேசத்திற்குள்ளாகும் இளைஞனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

மதங்களை இணைத்த காதல்
இரண்டு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இணைய முடியுமா, காதல் அவர்களை இணைக்கும் என்பதை மையமாக கொண்டு வெளியான படம் அலைகள் ஓய்வதில்லை. பாரதிராஜாவை தமிழ் சினிமாவின் முதன்மை இயக்குநராக அறிமுகப்படுத்திய படம் இது.

காதலுக்கு வயது தடையில்லை
மோகன், சுஹாசினி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான நெஞ்சத்தை கிள்ளாதே படமும் காதலை மாறுபட்ட கோணத்தில் காட்டியது. இதேபோல காதலுக்கு வயது தடையில்லை என்பதை சுட்டிக் காட்டிய படம். இதேபோல படிக்காத இளைஞனுக்கும் படித்த ஆசிரியைக்கும் இடையிலான காதலை சிறப்பாக காட்டிய படம் கடலோர கவிதைகள்

திருமணத்திற்கு பிந்தைய காதல்
காதல் தோல்வியால் பரிதவிக்கும் இளம்பெண்ணிற்கு ஏற்படும் திருமண பந்தம், அதையடுத்து அவருக்கு கணவனுடன் ஏற்படும் காதல் என்று காதலை வேறு கோணத்தில் காட்டியது மௌனராகம். இந்தப் படத்தின் மூலம் மணிரத்னம், இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் என்று பெயரெடுத்தார்.

காதலுக்கு மரியாதை தந்த படம்
புன்னகை மன்னன், மூன்றாம் பிறை, இதயம், குணா, சேது, பாம்பே என அடுத்தடுத்த காதல் படங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டன. அந்த வகையில் காதல்படம் என்று எடுத்துக் கொண்டால் விஜய்யின் காதலுக்கு மரியாதை படம் முதன்மை வரிசையில் இடம்பெறும் படமாக அமைந்தது.

இதயத்தை வருடிய படங்கள்
மின்னலே, 7ஜி ரெயின்போ காலனி, உன்னாலே உன்னாலே, விண்ணைத் தாண்டி வருவாயா, சில்லுனு ஒரு காதல், நீ தானே என் பொன்வசந்தம், குஷி, காதல், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்கள் 90களில் இதயத்தை வருடிய அல்லது ரணமாக்கிய படங்கள்.

வித்தியாசமான காதல்கள்
தற்போதும் காதல் வித்தியாசமான வகையில் காட்டப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு படத்திலும் காதல் மட்டும் அடிநாதமாக உள்ளது. திருமணத்திற்கு பிந்தைய காதலைப்பற்றி பேசிய படம் ராஜா ராணி. ஒன்றாக இணைந்து வாழ்வதை மையமாக்கிய படம் ஓகே கண்மணி.

ராம் -ஜானு கேரக்டர்கள்
இதேபோல சமீபத்தில் வெளியான 96, பள்ளிப் பருவத்து காதலை அது கொடுத்த வேதனையை வெளிப்படுத்தியது. அந்தப் படத்தின் ராம் மற்றும் ஜானுவை மறக்க முடியாமல் ரசிகர்களை தவிக்க விட்டது. இதனிடையே மாடர்ன் காதலை கூறிய பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் ரசிகர்களை கட்டிப் போட்டது.

மாறாத காதல்
காலங்கள் மாறினாலும் காதல் மற்றும் காதலர்கள் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் என்பதை இத்தகைய படங்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றன. இந்தப் படங்கள் காதலில் திளைப்பவர்களுக்கும் காதலுக்காக காத்திருப்பவர்களுக்கும் மனதளவில் தீனிப் போட்டு வருகின்றன.