»   »  காதலர் தினத்தை டெரராக மாற்றப் போகும் ஜெயம் ரவி - ராய் லட்சுமி

காதலர் தினத்தை டெரராக மாற்றப் போகும் ஜெயம் ரவி - ராய் லட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருட காதலர் தினத்திற்கு மிருதன், சௌகார்பேட்டை, ஜீரோ மற்றும் ஜில் ஜங் ஜக் ஆகிய 4 படங்கள் வெளியாகின்றன.

வழக்கமாக காதலர் தினத்திற்கு காதல் மற்றும் ரொமாண்டிக் படங்களே அதிகளவில் வெளியாகும். ஆனால் இந்த வருடம் சற்று திகிலான பேய் மற்றும் அமானுஷ்ய படங்கள் வெளியாகின்றன.

இதனால் இந்த வருட காதலர் தினம் சற்று டெரராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிருதன்

மிருதன்

தமிழின் முதல் ஸோம்பி படம் என்ற அடையாளத்துடன் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன் வருகின்ற 12ம் தேதி வெளியாகின்றது. அடுத்தடுத்து 3 வெற்றிப் படங்களை கொடுத்ததால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் சற்று அதிகமாக இருக்கிறது. நாய்கள் ஜாக்கிரதை புகழ் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

சௌகார்பேட்டை

சௌகார்பேட்டை

ராய் லட்சுமி - ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சௌகார்பேட்டை. அறிமுக இயக்குநர் வடிவுடையான் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்திருக்கிறார். சௌகார்பேட்டை இந்த ஆண்டின் முதல் பேய்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பேய்ப்படங்களுக்கு என்றே ஒரு ரசிகர் வட்டம் இருப்பதால் இந்தப் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.அவர்களின் நம்பிக்கையை சௌகார்பேட்டை காப்பாற்றுமா?பார்க்கலாம்.

ஜில் ஜங் ஜக்

ஜில் ஜங் ஜக்

சித்தார்த் நடிப்பில் சென்னை மழையால் தள்ளிப்போன ஜில் ஜங் ஜக் திரைப்படம் இந்த காதலர் தினத்தில் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான பாடல்கள் இளசுகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறிக்கிடக்கிறது. இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீரோ

ஜீரோ

மங்காத்தா, வேதாளம் புகழ் அஸ்வின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜீரோ. அஸ்வினுடன் இணைந்து ஷிவதா, ஜேடி.சக்கரவர்த்தி மற்றும் ரவி ராகவேந்திரா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.திகில் மற்றும் அமானுஷ்யம் கலந்து உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி இருக்கிறது.இந்தப் படம் ரசிகர்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும்? என்பது வருகின்ற காதலர் தினத்தில் தெரியவரும்.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

சிம்பு - நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இது நம்ம ஆளு இந்த காதலர் தினத்தில் வெளியாவதற்கான எந்த அறிகுறியும் தற்போது தெரியவில்லை. எனினும் அப்படம் இந்த காதலர் தினத்திற்கு வெளியானால் பிற படங்களின் வசூலை கணிசமாக அப்படம் பாதிக்கும் என்று கூறுகின்றனர். காதலர் தினத்திற்கு இன்னும் 3 வாரங்களுக்கு மேல் இருப்பதால் இப்படம் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எது எப்படியோ மொத்தத்தில் இந்த வருட காதலர் தினம், ரசிகர்களுக்கு டெரராக அமையப் போகிறது என்பது மட்டும் கண்கூடாகத் தெரிகிறது.

English summary
The Following Movies Miruthan, Zero, Jjil Jung Juk and Sowkarpettai may be Released on this Valentine's Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil