twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலித்துப்பார் உனக்கும் கவிதை வரும்… உன்னதமான காதலை கொண்டாடிய திரைப்படங்கள் ஓர்பார்வை !

    |

    சென்னை : காதலித்துப் பார் உனக்கும் கவிதை வரும்... காதலித்துப் பார் உன் கையெழுத்து அழகாகும்... காதலித்துப் பார் உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும் என்று கவிஞர் வைரமுத்து அழகாக கவிபாடி இருப்பார்.

    காதலிப்பவர்களுக்கு மட்டுதே தெரியும் காதலின் அழகான அவஸ்தை. காதலிப்பதும், காதலிக்கப்படுவதுமே காதலின் அழகுதானே.

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. உன்னதமான காதலை கொண்டாடிய திரைப்படங்கள்.. ஒரு பார்வை.

    காதலர் தினத்தில் திருமண முறிவு...அதிரடி முடிவெடுத்த பாலிவுட் பிரபலம் காதலர் தினத்தில் திருமண முறிவு...அதிரடி முடிவெடுத்த பாலிவுட் பிரபலம்

    முதல் மரியாதை

    முதல் மரியாதை

    காதலுக்கு ஓர் தடையில்லை எந்த வயதிலும் காதலுக்கு அழிவில்லை என்பதை சொன்ன கதைதான் முதல் மரியாதை. சிவாஜி, ராதா நடித்த இந்த திரைப்படம் என்றும் காதலர்கள் கொண்டாடும் திரைப்படமாகவே உள்ளது.

    காதல்கோட்டை

    காதல்கோட்டை

    பார்த்தவுடன் காதல், மோதலுக்குப் பின் காதல், காவியக் காதல், வயோதிக காதல், இளம்பருவத்தில் நிறைவேறாத காதல் (96 படம்) என காதலை வித விதமாக சொன்ன திரைப்படங்கள் மத்தியில் புதிய சிந்தனையாக 'பார்க்காமலே காதல்' என்று புதுவிதமான கான்செப்ட் மூலம் வித்தியாச காதல் கதையை சொன்ன திரைப்படம் காதல் கோட்டை. நீ இங்கு சுகமே... நான் அங்கு சுகமா... என அழகான வரிகள் மூலம் பார்க்காத காதலர்கள் கடிதம் மூலம் தங்கள் எண்ணத்தை பரிமாற இறுதிவரை அவர்கள் சந்திக்காமலே ( சந்தித்தபோதும் கதாநாயகி கோபத்துடனேயே அணுகும் நிலையில் எப்படி சேரப்போகிறார்களோ என்று சீட் நுனியில் நம்மை உட்கார வைத்த படம்) ஆனால் கிளைமாக்சில் அழகாக காதலர்களை சேர்த்து வைக்கும்போது அந்த ட்விஸ்ட் காரண்மாகவே படம் ஹிட் அடித்தது.

    காதல் முகம் பார்த்து, உருவம் பார்த்து வருவதில்லை இரு மனங்கள் இணைந்தால் போதும் என்பதை அழகாக சொன்னப்படம் காதல் கோட்டை. கடிதத்தால் உருவான காதல் காவியம் காதல்கோட்டை படம். அஜித், தேவயானி நடித்து பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது இப்படம். தமிழ் திரைக்கதையில் இது ஒரு புதிய பாராட்டத்தக்க முயற்சி எனலாம்.

    காதலுக்கு மரியாதை

    காதலுக்கு மரியாதை

    காதல் என்கிற மகத்தான சக்தியால் பின்னிப் பிணைந்து கட்டுண்ட இருவர் பெற்றோருக்காக காதலை தியாகம் செய்து காதலுக்கு மரியாதை கொடுத்த திரைப்படம். விஜய், ஷாலினி காதலின் பிரிவை உயிரோட்டத்துடன் நடமாடவிட்டு ஆர்ப்பரிக்க வைத்த படம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மனதில் என்றும் மரியாதை உண்டு

    சொல்லாமலே

    சொல்லாமலே

    1998 ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன், கவுசல்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சொல்லாமலே. தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான காதல் கதைகள் வந்தாலும் அதில் ஒரு சில படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உண்டு. காதலுக்காக தன்னுடைய நாக்கை அறுத்துக் கொண்டு ஊமையாக மாறிவிடும் கிளைமாக்ஸுக்காகவே படம் 100 நாட்கள் ஓடியது.

    ஆட்டோகிராப்

    ஆட்டோகிராப்

    ஒருவனுக்கு பள்ளி மற்றும் கல்லுாரி காலங்களில் தோன்றும் காதல்களும், அதை இழந்த வலியையும், அதற்கு நட்பு கொடுத்து ஆறுதல் தந்த திரைப்படம் ஆட்டோகிராப். இதில், சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி பல வருடங்கள் சென்ற பின்பும். நெஞ்சில் பசுமையாக உள்ளது ஆட்டோகிராப்.

    96

    96

    எல்லாருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது. அதில், கொண்டாட ஒரு காதலும் இருக்கும். அந்த கடந்த கால நினைவுகளை உங்களுக்கு மீட்டுத் கொடுத்து, உங்களை கடந்த காலத்துக்கு கைபிடித்து அழைத்துச்சென்ற திரைப்படம் 96. விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த படத்தை இளசு முதல் பெருசுவரை பெரிதும் கொண்டாடினர்.

    முதல் நீ முடிவும் நீ

    முதல் நீ முடிவும் நீ

    சமீபத்தில் வெளியாகி இளசுகள் கொண்டாடி வரும் திரைப்படம் முதல் நீ முடிவும் நீ. மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் ஒப்பற்ற விஷயங்களில் ஒன்று நினைவுகளை அசைப்போடுவது. எல்லோருக்கும் நமது பதின்பருவ நாள்களை அசைபோட்டுப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. அப்படியாக 90கால கட்டத்தின் பள்ளி நாள்களை இனிமையாக கோர்த்த சினிமா முதல் நீ முடிவும் நீ.

    English summary
    valentine's day special movies in tamil, காதலை கொண்டாடிய திரைப்படங்கள்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X