»   »  இளைய தலைமுறையை அதிகம் வசீகரித்த 'டாப் 5' காதல் பாடல்கள்

இளைய தலைமுறையை அதிகம் வசீகரித்த 'டாப் 5' காதல் பாடல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு படத்தில் எத்தனை பாடல்கள் இருந்தாலும் எல்லோரையும் அதிகம் கவருவது என்னவோ காதல் பாடல்கள்தான்.

அந்த வகையில் இன்றைய இளைய தலைமுறையை அதிகம் கவர்ந்த சிறந்த 5 காதல் பாடல்களை பற்றி இங்கே பார்க்கலாம்.


இங்கே இடம்பெற்றிருக்கும் பாடல்கள் அனைத்துமே இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


இன்னும் கொஞ்ச நேரம்

தனுஷ் - பார்வதியின் மரியான் படத்தில் இடம்பெற்ற "இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத் தான் என்ன, ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு பொன்னே" பாடல் எல்லோரையும் கவர்ந்த ஒரு பாடலாகத் திகழ்கிறது. படம் வெற்றி பெறாமல் போனாலும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறியது. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான காதலர்களின் செல்போன் ரிங்டோனாக இன்னும் இருக்கிறது 'இன்னும் கொஞ்ச நேரம்'.
என்னை மாற்றும் காதலே

விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படத்தில் இடம்பெற்ற "என்னை மாற்றும் காதலே" படத்தைப் போலவே பாடலும் சூப்பர் ஹிட்டடித்தது. அதிலும் "எதுக்காக கிட்ட வந்தாளோ, எதை தேடி விட்டு போனாளோ" ஆரம்ப வரிகள் கேட்கிறவர்களை கண்டிப்பாக உருக்கி விடும். இப்படம் ஹிட்டடித்ததில் பாடல்களுக்கு ஒரு பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.
அலுங்குறேன் குலுங்குறேன்

அதர்வா - ஆனந்தி நடிப்பில் சண்டிவீரன் படத்தில் இடம்பெற்ற 'அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆசை நெஞ்சிலே" கடந்த வருடத்தில் எல்லோரையும் கட்டிப் போட்ட பாடல் அநேகம் இதுவாகத் தான் இருக்கும். அதர்வா - ஆனந்தியின் இளமையான கெமிஸ்ட்ரியும், பாடல் வரிகளும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை. யூடியூபில் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்தப் பாடலை பார்த்து ரசித்திருக்கின்றனர்.


ஏ சண்டைக்காரா

இறுதிச்சுற்று படத்தில் மாதவனை நினைத்து ரித்திகா சிங் பாடும் "ஏ சண்டைக்காரா குண்டு முழியில" இந்த வருடத்தில் அனைவரையும் கவர்ந்த பாடலாக மாறியிருக்கிறது. பாடல் வெளியாகி குறுகிய காலத்திலேயே 18 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்தப் பாடலை பார்த்து ரசித்திருக்கின்றனர். ஒரு பெண்ணின் ஆசைகளை வெளிப்படுத்தும் பாடல் என்றாலும் ஆண்களைக் கவருவதிலும் குறை வைக்கவில்லை ஏ சண்டைக்காரா.
உன்மேல ஒரு கண்ணு

சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் இடம்பெற்ற 'உன்மேல ஒரு கண்ணு' இந்த ஆண்டின் மாபெரும் ஹிட் பாடல் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. கீர்த்தி சுரேஷின் துறுதுறு ரியாக்ஷன்களும், பாடல் வரிகளும் ரசிகர்களைக் கவர்ந்ததில் இணையத்தில் 38 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைத் தாண்டி இருக்கிறது "உன் மேல ஒரு கண்ணு, நீதான் என் மொறைப் பொண்ணு".
English summary
2016: Valentine's Day Special- Top 5 Best Love Songs List.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil