»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கவிஞர் வாலிக்கு பாராட்டு விழா நடத்த தமாகா முடிவு செய்துள்ளது. இம்மாதம் 16 ம் தேதி நடைபெறும்இப்பாராட்டு விழாவில் தமாகா தலைவர் மூப்பனார் பங்கேற்கிறார்.

இத்தகவலை சென்னையில் திங்கள்கிழமை தமாகா தலைவர் நிர்வாகிகள் முக்தா சீனிவாசன், நேதாஜி, இதயதுல்லாஆகியோர் தெரிவித்தனர்.

கவிஞர் வாலி, பாண்டவர் பூமி என்ற இலக்கிய நூலை எழுதியுள்ளார். புதிய உரைநடையாக இந்நூல்எழுதப்பட்டுள்ளது. இதனால் தமிழ் வளர்ச்சி பெறும் என்றும், அதற்காக வாலியை பாராட்டவே இந்த விழாஎன்றும் இவர்கள் தெரிவித்தனர்.

சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடைபெறும் இவ்விழாவில் மூப்பனார், பத்திரிக்கையாளர்சோ.ராமசாமி மற்றும் பலர் வாலியைப் பாராட்டி பேசுகின்றனர்.

Read more about: chennai, felicitation, tmc, vali
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos