விறுவிறுப்பான வேலைகள்...வலிமை நடிகை வெளியிட்ட ஹாட் அப்டேட்

சென்னை : அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்கள் பலரும் வலிமை படத்தின் ரிலீசிற்காக காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பலரும் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.

Valimai actress shares hot updates and amazing moments with Thala Ajith

இந்நிலையில் வலிமை படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை அந்த படத்தில் நடித்த நடிகை ஜானகி பகிர்ந்துள்ளார். இந்திரா சுப்ரமணியன் இயக்கிய நவம்பர் ஸ்டோரி வெப் சீரிசில் நடித்தவர் தான் இந்த ஜானகி. தமன்னா, பசுபதி, ஜி.எம்.குமார் ஆகியோர் நடித்துள்ள அந்த வெப் சீரிசில் முக்கிய கேரக்டரில் ஜானகி நடித்துள்ளார்.

வலிமை படத்திலும் அஜித்தின் அண்ணியாக இவர் நடித்துள்ளாராம். சமீபத்தில் இணையத்தில் கசிந்த வலிமை படத்தின் ஃபோட்டோவில் பிங்க் கலர் புடவை உடுத்தி இருப்பது நான் தான் என்ற விபரத்தையும் ஜானகி தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சுமித்ரா அஜித்தின் அம்மாவாக நடித்துள்ளாராம்.

வலிமை படத்திற்காக டப்பிங் பேச வந்தவரிடம் கேட்ட போது இதனை தெரிவித்தார். மேலும், படம் மிக அற்புதமாக வந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது ஐதராபாத்தில் மிகவும் குளிராக இருந்தது. இரவு நேர படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் நடுங்கி விட்டோம்.

ஆனால் நடிகர் அஜித், அந்த சமயத்திலும் தனது கேரவனிலேயே அனைவருக்கும் சூடாக சிக்கன் சூப் தயாரித்து கொண்டு வந்து கொடுத்தார். படப்பிடிப்பிற்கு நான் எனது குழந்தையையும் அழைத்துச் சென்றேன். அஜித், ரொம்ப ஃபிரெண்டிலியாக பெயரை கேட்டு, நன்றாக பேசினார்.

Valimai actress shares hot updates and amazing moments with Thala Ajith

இதற்கு மேல் வலிமை படம் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. மற்றவற்றை வலிமை ரிலீசின் போது தெரிந்து கொள்ளுங்கள். அனைவருமே படம் எப்போது ரிலீசாகும் என்று தான் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார். வலிமை படத்திற்காக டப்பிங் பேசும் பணிகள் நடந்து வருவதால், விரைவில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

Valimai படத்தின் புது Update | OTT release! Thala Ajith, Boney Kapoor, H.Vinoth

ஹச்.வினோத் இயக்கும் வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித், ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X