Don't Miss!
- News
"ஹோப்".. 2 பேருக்கு போனை போட்ட ஸ்டாலின்.. "புரியுதா? அது போதாது".. பறந்த உத்தரவு.. மலைத்த "புள்ளி"
- Lifestyle
உங்க ழுழங்காலில் இந்த அறிகுறிகள் இருந்தா... அது ஆபத்தானதாம்...உங்களால நடக்க முடியாம கூட போகலாமாம்!
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Finance
ரத்தகளறியான அதானி குழும பங்குகள்.. 20 சதவீதம் வரையில் சரிவு..!
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
வலிமை ஆட்டம் ஆரம்பமாயிடுச்சு... தக தகன்னு மின்னலாம்...புதிய ப்ரோமோ சாங் ரெடி
சென்னை : அஜித்தின் வலிமை பட ரிலீஸிற்கு இன்னும் ஒரு வாரமே மீதமுள்ளது இந்நிலையில் ரிலீசிற்கான ப்ரோமோவாக புதிய பாடல் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். விஜய்யின் அரபிக்குத்தை தொடர்ந்து, அஜித்தின் வலிமை ப்ரோமோ பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.
ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60வது படமாக உருவாகி உள்ளது வலிமை. போனி கபூர் தயாரிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த, த்ரில்லர் படமாக வலிமை படம் உருவாக்கப்பட்டுள்ளது. அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, புகழ், சுமித்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி ரோலில் நடிக்கிறார்.
முதல் படமே அஜித்துடன் தான்...சிவகார்த்திகேயன் பற்றி இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா

வலிமை பிரம்மாண்ட ரிலீஸ்
பிப்ரவரி 24 ம் தேதி மிக பிரம்மாண்டமாக உலகம் முழுக்க வலிமை படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜப்பான், மலேசியா, அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட பல நாடுகளிலும் வலிமை படம் ரிலீசாவது உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கிட்டதட்ட 700 முதல் 1000 தியேட்டர்களில் வலிமை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

வலிமை வெளியாகும் நேரம்
வலிமை படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பிப்ரவரி 24 ம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ரிலீசான முதல் நான்கு நாட்களுக்கு அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோவை திரையிட சிறப்பு அனுமதி வேறு வாங்கி உள்ளார்களாம். தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு ரிலீசாகும் முதல் பெரிய நடிகரின், பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

ப்ரோமோஷனே இல்லாமல் மாஸ்
அதே சமயம் ரிலீசுக்கு இன்னும் ஒரே வாரமே உள்ள நிலையில் இதுவரை படத்திற்கான எந்த ப்ரோமோஷன் வேலைகளையும் படக்குழு துவக்கவில்லை. இதை பலரும் குற்றச்சாட்டாக முன்வைத்து வரும் நிலையில், ப்ரொமோஷனே இல்லாமல் வலிமை படத்திற்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதே. அஜித் படத்திற்காக ரசிகர்களே சோஷியல் மீடியாவில் ப்ரொமோஷன் செய்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதற்கிடையில் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்த ஏகே 61 படத்தின் ஷுடட்டிங் துவங்க உள்ளதாக அஜித்தின் நெகட்டிவ் இமேஜுடன் வெளியிட்டு அசத்தி உள்ளார் போனி கபூர்.

வலிமை புதிய ப்ரோமோ சாங்
இந்நிலையில் அடுத்த கட்டமாக பிப்ரவரி 24 அன்று வலிமை ரிலீஸ் ஆக உள்ளதை கொண்டாடும் விதமாக புதிய பாடல் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் போனி கபூர். வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேற மாரி பாடலில் வரும் தகதகன்னு மின்னலாம் என்ற வரிகள் துவங்கும் இடத்தில் துவங்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை வலிமை ஆட்டம் ஆரம்பமாயிடுச்சு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு ValimaiPromo ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.