twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித் கட் அவுட்டுக்காக பால், தயிர் திருடிய ரசிகர்கள்.. வருத்தம் தெரிவித்த வலிமை பட விநியோகஸ்தர்!

    |

    சென்னை: அஜித் ரசிகர்கள் செய்த திருட்டு செயலுக்கு வலிமை படத்தின் விநியோகஸ்தர் வருத்தம் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வலிமை திரைப்படம் வெளியானது.

    அஜித் குமார் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய ரசிகர்கள் சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆவின் பால் வண்டியில் இருந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை திருடியதாக குற்றச்சாட்டுகள் பதிவாகின.

    முறுக்கேறிய சிக்ஸ் பேக் உடம்பு… கோபம் கொப்பளிக்கும் முகம்... மிரட்டும் பிக் பாஸ் ஆரவ் !முறுக்கேறிய சிக்ஸ் பேக் உடம்பு… கோபம் கொப்பளிக்கும் முகம்... மிரட்டும் பிக் பாஸ் ஆரவ் !

    இளைஞர்களுக்கு அட்வைஸ்

    இளைஞர்களுக்கு அட்வைஸ்

    நடிகர் அஜித் குமார் வலிமை படத்தில் அம்மா அப்பா பேச்சை கேட்டு இளைஞர்கள் நல்ல வழியில் நடக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஆனால், அஜித் ரசிகர்கள் தங்கள் நாயகனின் பெயருக்கே களகங்கம் விளைவிக்கும் விதமாக இப்படியான இழிவான செயல்களில் ஈடுபட்டிருந்தது பெரும் விவாத பொருள் ஆனது.

    அஜித்துக்கு அபிஷேகம்

    அஜித்துக்கு அபிஷேகம்

    முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியான வலிமை பட வெளியீட்டு சமயத்தில் கோயம்பேடு ரோகினி திரையரங்க வளாகத்தின் முன்பாக பால் விநியோக வாகனம் சென்ற போது அங்கு கூடியிருந்த அஜித் ரசிகர்களில் சிலர் அந்த பால் வாகனத்தில் ஏறி பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை திருடி அஜித் கட்அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்தனர்.

    திருட்டு

    திருட்டு

    விரும்பத்தகாத இந்நிகழ்வு தொடர்பாக வீடியோக்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியான நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அஜித் ரசிகர்களின் செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட ரசிகர்களை கைது செய்ய வேண்டும், ரசிகர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை அஜித்குமார் அவர்கள் தட்டிக் கழிக்க கூடாது எனவும் கோரிக்கை முன் வைத்திருந்தனர்.

    வருத்தம்

    வருத்தம்

    இந்நிலையில் அப்படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தரும், வலிமை படத் தயாரிப்பாளர் போனிகபூர் அவர்களின் பிசினஸ் ஹெட்டுமான ராகுல் அவர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27.02.2022) தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட வெளியீட்டு சமயத்தில் நடைபெற்ற ரசிகர்கள் செய்த விரும்பத்தகாத அந்நிகழ்விற்காக வருந்துவதாக கூறி வருத்தம் தெரிவித்ததோடு, அன்றைய தினம் கோயம்பேடு ரோகினி திரையரங்க வளாகத்தின் வழியாக சென்ற பால் விநியோக வாகனத்தில் இருந்து ரசிகர்களால் திருடப்பட்ட பால் மற்றும் தயிருக்கான தொகையை செலுத்துவதாக தெரிவித்தததாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    Recommended Video

    புதுச்சேரி: 'வலிமை' படத்தை பார்த்து மகிழ்ந்த ஆதரவற்ற குழந்தைகள்... அசத்திய அஜித் ரசிகர் மன்றத்தினர்!
    தவிர்க்க வேண்டும்

    தவிர்க்க வேண்டும்

    அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி புதிய படங்கள் வெளியாகும் போது அனைத்து முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் இதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருவது நடிகர்களுக்குத் தான் பெரிய இழுக்காக மாறிவிடுகிறது. ‘தல' என்ற டைட்டிலையே தூக்கி எறிந்த அஜித்துக்கு ரசிகர்கள் இப்படி சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அஜித் ரசிகர்களே தவறு செய்த சில ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    English summary
    Valimai distributor says sorry and pay money for Milk theft on Valimai FDFS day by Ajith Kumar fans. AK fans theft Milk and Curd for celebrates Valimai FDFS shocks Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X