வலிமை ஃபஸ்ட் ஷோ டைம்... லீக்கான மிரட்டல் அப்டேட்...திருவிழாவாய் கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கடந்த இரண்டுகளாக இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது வலிமை. இப்டேட் கேட்டே இந்த படத்தை உலக ஃபேமஸ் ஆக்கி விட்டனர் அஜித் ரசிகர்கள்.
நீண்ட காத்திருப்பிருப்பிற்கு பிறகு ஜுலை மாதம் முதல் முறையாக வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை போனி கபூர் வெளியிட்டார். இதை செம மாஸாக கொண்டாடி தீர்த்தனர் அஜித் ரசிகர்கள். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரிக்க துவங்கியது. படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.

பொங்கல் ரிலீஸ்
தீபாவளிக்கே வலிமை படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடியவில்லை என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அம்மா பாடல் வெளியீடு
ஏற்கனவே வெளியிடப்பட்ட ஃபஸ்ட் சிங்கிளான நாங்க வேற மாரி பாடல் செம ஹிட்டாகி யூட்யூப்பில் சாதனை படைத்த நிலையில், செகண்ட் சிங்கிளான அம்மா பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மனதை உருக வைக்கும் இந்த அம்மா சென்டிமென்ட் பாடலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஜான்வி கபூர், யுவன்சங்கர் ராஜா, ஹச்.வினோத் என அனைவரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும், பாராட்டியும் வருகின்றனர்.

டீமுக்கு குவியும் வாழ்த்து
டைரக்டர் ஹச்.வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரு குழந்தையையும், தாயையும் இந்த பாடல் நெருக்கமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். யுவனின் இசையில் அமைந்துள்ள இந்த சூப்பர் மெலடி பாடலை அனைவரும் புகழ்ந்து, வலிமை டீமுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

விறுவிறுப்பான டிக்கெட் புக்கிங்
வலிமை படம் ஜனவரி 12 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ள தகவல் பரவி வந்தது. இதனை சில தியேட்டர் உரிமையாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து வலிமை படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் துவங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஃபஸ்ட் ஷோ நேரம்
இந்நிலையில் வலிமை படத்தின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ எத்தனை மணிக்கு ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் கசிந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். லேட்டஸ்ட் தகவலின் படி நள்ளிரவு 1 மணிக்கு வலிமை படத்தின் ஃபஸ்ட் ஷோ தமிழகம் முழுவதும் திரையிடப்பட உள்ளதாம்.

கொண்டாடும் ரசிகர்கள்
பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்களின் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ அதிகாலை 4 மணி என்ற ரேஞ்சிலேயே திரையிடப்படும். ஆனால் வலிமை படம் ரசிகர்கள் ஷோவை தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கே திரையிடப்பட உள்ளது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், திரைத்துறையினருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











