நாங்க வேற மாதிரி....வலிமை சிங்கிள் டிராக் எப்போ தெரியுமா...சுடசுட வந்த அப்டேட்

சென்னை : அஜித் நடிக்கும் வலிமை படம் 2019 ல் பூஜையுடன் துவங்கியது. ஹச்.வினோத் இயக்கத்தில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தனது பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி பேனரில் இந்த படத்தை தயாரிக்கிறார். நேர் கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ள படம் இது.

அஜித்தின் 60 வது படமாக உருவாகி உள்ள வலிமை படத்தில் ஹுமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். மிரட்டல் வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபுவும் நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை வேலைகளை கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடித்து விட்டதாக யுவன் சங்கர் ராஜா கூறி இருந்தார்.

படம் துவங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் அடுத்தடுத்த பல தடைகளால் இன்னமும் இந்த படத்தின் வேலைகள் முடிக்கப்படவில்லை. இந்த வருடமாவது படம் ரிலீசாகுமா என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் எதிர்பார்த்து, காத்திருக்கின்றனர். படம் துவங்கியது முதலே அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர்.

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் என அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டது போதாதென கோயில் பூசாரியிடமும் அப்டேட் கேட்கும் அளவிற்கு வந்து விட்டனர். இப்படி கேட்க வேண்டாம் என அஜித் அறிக்கை வெளியிட்டும் ரசிகர்கள் கேட்பதாக இல்லை.

கொரோனாவால் தள்ளிப் போன ஃபஸ்ட்லுக்

கொரோனாவால் தள்ளிப் போன ஃபஸ்ட்லுக்

இதனால் ரசிகர்களை இனியும் காக்க வைக்க வேண்டாம் என அஜித்தின் 50 வது பிறந்தநாளான மே 1 ம் தேதியன்று வலிமை ஃபஸ்ட்லுக்கை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால், மக்கள் துன்பத்தில் இருக்கும் சமயத்தில் கொண்டாட்டம் வேணாம் என அஜித் கூறியதால் அதுவும் தள்ளிப் போனது.

சஸ்பென்சாக வந்த மோஷன் போஸ்டர்

சஸ்பென்சாக வந்த மோஷன் போஸ்டர்

பலமுறை கேட்டும் அப்டேட் தராத வலிமை படக்குழுவினர், சஸ்பென்சாக சில வாரங்களுக்கு முன் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டனர். மிரட்டல் இசையுடன், இளமை லுக்கில், அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடனும் வெளியானது மோஷன் போஸ்டர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

வலிமை ஃபஸ்ட் சிங்கிளும் வருது

வலிமை ஃபஸ்ட் சிங்கிளும் வருது

இத்தனை காலம் காத்திருந்த ரசிர்களுக்கு இப்போது அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர் படக்குழுவினர். சமீபத்தில் தான் ஆகஸ்ட் 15 ல் வலிமை படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தகவல் கூறப்பட்டது. இதற்கிடையில் வலிமை ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடும் தேதி தற்போது வெளியாகி உள்ளது.

இந்த தேதியில் ஃபஸ்ட் சிங்கிளா

இந்த தேதியில் ஃபஸ்ட் சிங்கிளா

லேட்டஸ்ட்டாக வந்த தகவலின் படி, வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நாளை, அதாவது ஆகஸ்ட் 2 ம் தேதி வெளியிட போகிறாராம். ஃபஸ்ட் சிங்கிளை மட்டுமல்ல பாட்டின் டைட்டிலையும் வெளியிட போகிறாராம். இந்த பாடலின் முதல் வரி, நாங்க வேற மாதிரி என துவங்குகிறதாம்.

என்ன ஸ்பெஷல் இருக்கும்

என்ன ஸ்பெஷல் இருக்கும்

ஏற்கனவே கிளப்ஹவுசில் பேசிய யுவன், படத்தில் அம்மா சென்டிமென்ட் பாட்டு ஒன்று உள்ளதாக கூறி விட்டார். அதைத் தொடர்ந்து வலிமை படத்தின் ஸ்டில் ஒன்றும் வெளியாகி குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதை உறுதிப்படுத்தி விட்டது. அதனால் இந்த சிங்கிள் டிராக்கில் வேறு என்னவெல்லாம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.

வலிமை ரிலீஸ் எப்போ

வலிமை ரிலீஸ் எப்போ

ஃபஸ்ட் சிங்கிளை தொடர்ந்து, டீசரையும் வெளியிட்டு அசத்த உள்ளனர். அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் ஷுட்டிங் 2022 ம் ஆண்டு ஜனவரியில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுவதால் 2021 ம் ஆண்டிற்குள்ளாகவே வலிமை படத்தை ரிலீஸ் செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆயுத பூஜை அல்லது தீபாவளி ரிலீசாக வலிமை படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்திருக்கும் திரையுலகம்

காத்திருக்கும் திரையுலகம்

ஏற்கனவே ரஜினி நடிக்கும் அண்ணாத்த படம் தீபாவளி ரிலீஸ் என தேதியை அறிவித்து விட்டனர். தற்போது அஜித்தின் வலிமை விறுவிறுப்பாக தயாராகி வருவதால், அந்த படத்தின் ரிலீஸ் தேதியை பொறுத்தே, இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய பட தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமே வலிமை ரிலீஸ் தேதியை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X