வலிமைக்கு இரண்டு இசையமைப்பாளர்...அப்போ பேக்கிரவுண்ட் இசை யுவன் இல்லையா ?

சென்னை : வலிமை படத்தில் யுவன்சங்கர் ராஜா மட்டுமில்லையாம் இன்னொரு முன்னணி இசையமைப்பாளரும் பணியாற்றி உள்ளாராம். இவர் தான் படத்திற்கு பேக்கிரவுண்ட் இசையை அமைத்ததாம்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் தான் தற்போது டாக் ஆஃப் தி மீடியாவாக உள்ளது. இந்திய திரையுலகத்தையும் தாண்டி, உலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் படமாக வலிமை மாறி உள்ளது. படம் ரிலீசாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் படம் பற்றிய புதிய தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

வலிமை படம் ஒரு பக்கம் ரிலீசுக்கு முன்பே வசூல் சாதனை படைத்து வருகிறது. டிக்கெட் புக்கிங்கிலேயே பல டாப் படங்களின் சாதனையை முறியடித்து விட்டது. மற்றொரு புறம் தயாரிப்பாளர் போனி கபூரோ ப்ரோமோக்களை தாராளமாக வாரி வழங்கி வருகிறார். தினம் ஒரு மாஸ் ப்ரோமோவை வெளியிட்டு அனைவரையும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி வருகிறார்.

வலிமையில் விஜய் சேதுபதி மகன்

வலிமையில் விஜய் சேதுபதி மகன்

ஆனால் நேற்று பெங்களூருவில் நடந்த வலிமை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய டைரக்டர் ஹெச்.வினோத், மிக சுருக்கமாக படம் பற்றி பேசி முடித்து விட்டார். இந்நிலையில் வலிமை பற்றிய புதிய தகவலாக இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் அவர் என்ன ரோலில் நடித்துள்ளார் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பேக்கிரண்ட் மியூசிக் அமைத்தது இவரா

பேக்கிரண்ட் மியூசிக் அமைத்தது இவரா

இந்நிலையில் மற்றொரு தகவலாக வலிமை படத்தில் யுவன்சங்கர் ராஜா மட்டும் இசை அமைக்கவில்லையாம். மற்றொரு டாப் இசையமைப்பாளரான ஜிப்ரானும் இசை அமைத்துள்ளாராம். வலிமை படத்தில் மிரட்டலான பேக் கிரண்ட் மியூசிக் அமைத்ததே ஜிப்ரான் தானாம். இந்த தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.

வலிமையில் மாற்றப்பட்ட நடைமுறை

வலிமையில் மாற்றப்பட்ட நடைமுறை

அஜித்தின் ஃபேவரைட் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. அஜித்தின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அஜித் படத்திற்காக எப்போதும் ஸ்பெஷல் தீம் மியூசிக்கை உருவாக்குவது யுவனின் வழக்கம். ஆனால் இந்த நடைமுறை வலிமை படத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதில் பாடல்களுக்கு இசையமைத்தது தான் யுவன்சங்கர் ராஜாவாம். பேக்கிரவுண்ட் மியூசிக்கை உருவாக்கியது ஜிப்ரான் தானாம். ஜிப்ரான் ஏற்கனவே ஹெச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றி உள்ளார்.

இசை சங்கமம் எப்படி இருக்கும்

இசை சங்கமம் எப்படி இருக்கும்

பேக்கிரண்ட் மியூசிக்கின் கிங் என போற்றப்படுபவர் யுவன்சங்கர் ராஜா. ஆனால் மிக முக்கியமான வலிமை படத்திற்கு ஏன் அவரை பேக்கிரண்ட் மியூசிக் அமைக்க சொல்லாமல் ஜிப்ரானிடம் அந்த பொறுப்பை கொடுத்தார்கள் என இதுவரை காரணம் தெரியவில்லை. ஆனால் வலிமை படத்திற்கு யுவன் பேக்கிரவுண்ட் மியூசிக் அமைக்காதது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை தந்துள்ளது. அதே சமயம் யுவன்-ஜிப்ரான் காம்போவில் வலிமையில் ஒரு வித்தியாசமான இசை சங்கமத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வேற லெவலில் மிரட்டுறாங்களே

வேற லெவலில் மிரட்டுறாங்களே

யுவனின் இசை பாடல்களை ஹிட்டடிக்க வைத்தது என்றால், ஜிப்ரானின் இசை டிரைலர், ப்ரோமோ போன்றவை வேற லெவலில் ஹிட் ஆக்கி உள்ளது. இதனால் இவர்களின் இந்த புதிய காம்போ, ரசிகர்களுக்கு தியேட்டரில் புது விதமான அனுபவத்தை தரும் என்பதை மட்டும் படக்குழுவினர் அடித்துச் சொல்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X