செம ஹாட் அப்டேட்...வலிமை இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போ தெரியுமா
சென்னை : அஜித் நடிக்கும் வலிமை படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வேண்டிய சீன்கள் பாக்கி இருப்பதாலேயே படத்தை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது.
அஜித் நடிக்க வேண்டிய க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் மட்டும் தான் வெளிநாட்டில் எடுக்கப்பட உள்ளதாம். முதலில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஸ்பெயினில் நடத்த உள்ளதாக கூறி வந்தனர். ஆனால் கொரோனா காரணமாக ஸ்பெயின் செல்வதற்கு அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதாம்.

சில நாட்களில் இறுதிக்கட்ட ஷுட்டிங்
இதனால் ஸ்பெயினில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. மிக சில நாட்களிலேயே இந்த படப்பிடிப்பை நடத்தி முடிக்க டைரக்டர் ஹச்.வினோத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காத்திருக்கும் ரசிகர்கள்
சமீபத்தில் வெளியிடப்பட்ட வலிமை ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியன படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகப்படுத்தி விட்டது. இதனால் படத்தை எப்போது முடித்து, வெளியிடுவார்கள் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அப்டேட் தந்த வெங்கட் பிரபு
படத்தை முழுவதும் முடித்த பிறகே டீசர், டிரைலர் போன்றவற்றை வெளியிட உள்ளார்கள். அதைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 நாட்களுக்கு முன் வலிமை அப்டேட் கொடுத்த மாநாடு படத்தின் டைரக்டர் வெங்கட் பிரபு, வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை யுவன் தயார் செய்து விட்டதாகவும், விரைவில் இது வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

எப்போ இறுதிக்கட்ட ஷுட்டிங்
லேட்டஸ்ட் அப்டேட்டாக, வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய ஆக்ஷன் காட்சிகளை படமாக்க வலிமை படக்குழு சமீபத்தில் வெளிநாடு புறப்பட்டு சென்று விட்டதாம். அங்கு கடைசியாக ஒரு சில நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டிய படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ம் தேதி துவங்க உள்ளதாம்.

தீபாவளி ரிலீசா வலிமை
இதோடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் வலிமை படக்குழு கவனம் செலுத்த உள்ளதாம். முக்கியமான பண்டிகை நாளில் படத்தை ரிலீஸ் செய்வதற்காக தான் படுதீவிரமாக வேலைகள் நடந்து வருகிறதாம். இதனால் தீபாவளி ரிலீசாக வலிமை படம் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இசையை முடித்த யுவன்
போனி கபூரின் பேவ்யூ ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதன்மை ஃபோட்டோகிராஃபி வேலைகளை நிரவ் ஷா மேற்கொண்டு வருகிறார். படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











