"தெறிக்க விடலாமா".. வருது வலிமை ஃபஸ்ட் சிங்கிள்...மிரண்டு போன ட்விட்டர் டிரெண்டிங்

சென்னை : அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் இன்று இரவு 10 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த தகவல் வெளியானது முதலே ட்விட்டர் டிரெண்டிங் மிரண்டு போகும் அளவிற்கு வலிமை தொடர்பான ஹேஷ்டேகுகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகின்றன. படம் பூஜை போட்டது முதலே ட்விட்டர் டிரெண்டிங்கில் அதிகம் இடம் பெற்ற பெயர் வலிமை, அஜித் என்பது தான்.

அப்டேட் வெளியிடாமல் இருந்த சமயத்திலேயே அவ்வப்போது அஜித் ரசிகர்கள், வலிமை பற்றி ஏதாவது ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கி வந்தனர். தற்போது அடுத்தடுத்த அப்டேட்கள், ஃபஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் சிங்கிள் பாடல் என வரிசையாக வந்தால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்.

தினம் ஒரு அப்டேட்டா

தினம் ஒரு அப்டேட்டா

ஹச். வினோத் இயக்கத்தில் அஜித், கடந்த 2 ஆண்டுகளாக நடித்து வரும் படம் என்பதால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. படம் துவங்கியது முதல் ஒரு அப்டேட் கூட வெளியிடாமல் இருந்த படக்குழுவினர், தற்போது அத்தனைக்கு சேர்த்து தினம் ஒரு அப்டேட், அதுவும் சஸ்பென்சாக வெளியிட்டு அசத்தி வருகின்றனர்.

சஸ்பென்சாக வந்த மோஷன் போஸ்டர்

சஸ்பென்சாக வந்த மோஷன் போஸ்டர்

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை ஜுலை 11 அன்று போனி கபூர் வெளியிட்டார். இதுவும் சஸ்பென்சாக வந்து, தல ரசிகர்களை சந்தோஷத்தில் கொண்டாட்டம் போட வைத்தது. மிக குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட மோஷன் போஸ்டர் என்ற சாதனையை வலிமை நிகழ்த்தியது.

 வெளிநாடு செல்லும் வலிமை டீம்

வெளிநாடு செல்லும் வலிமை டீம்

இந்நிலையில் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை எடுக்க படக்குழு விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாம். முதலில் ஸ்பெயினில் எடுக்கப்படுவதாக இருந்த இந்த காட்சிகள் தற்போது ரஷ்யாவில் எடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் ஐந்தே நாட்களில் வெளிநாட்டு ஷுட்டிங் நடத்தி முடிக்கப்பட உள்ளதாம்.

இன்று ஃபஸ்ட் சிங்கிள் பாடல்

இன்று ஃபஸ்ட் சிங்கிள் பாடல்

இன்னும் 10 நாட்கள் நடக்கும் ஷுட்டிங்குடன் வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடியும் என போனி கபூரே கூறி விட்டார். வலிமை வேலைகளை முடித்து விட்டு அஜித்தின் அடுத்த பட வேலைகளை துவங்க உள்ளதாக போனி கபூர் கூறி உள்ளார். இதனால் தல ரசிகர்கள் அளவில்லாத சந்தோஷத்தில் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிராக் பாடலை இன்று இரவு 10 மணிக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட உள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இவ்வளவு இருக்கா

இவ்வளவு இருக்கா

வலிமை படத்தின் பாடல்களை அறிவு மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எழுதி உள்ளனர். இன்று வெளியாக உள்ள முதல் சிங்கிள் டிராக் பாடலின் முதல் வரி, நாங்க வேற மாதிரி என அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த பாடலை யுவனும், அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல வலிமை படத்தில், என்னை அறிந்தால் படத்தில் வரும் அதாரு அதாரு பாடலை போல் மரண மாஸ் குத்தாட்ட பாடல் ஒன்றை எழுதி உள்ளாராம் விக்னேஷ் சிவன். அதாரு அதாரு பாடலை எழுதியதும் விக்னேஷ் சிவன் தான்.

மிரண்டு போன ட்விட்டர் டிரெண்டிங்

மிரண்டு போன ட்விட்டர் டிரெண்டிங்

வலிமை ஃபஸ்ட் சிங்கிள் வர போகுது என சொன்னதில் இருந்து ValimaiFirstSingle, HVinoth, Ajith, Thala, ThalaAjith, VeraMaari போன்ற வலிமை தொடர்பான அத்தனை பெயர்களிலும் ஹேஷ்டேக் உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கியதுடன், வலிமை ஃபஸ்ட் சிங்கிளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் என ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப்பில் கொண்டு போய் வைத்து விட்டனர். வலிமை ஃபஸ்ட் சிங்கிள் பாடலுக்காக லைக் பேஜ் வேறு துவங்கி உள்ளனர்.

குவியும் கமெண்ட்கள்

குவியும் கமெண்ட்கள்

இன்று இரவு அஜித், யுவன் ரசிகர்களுக்கு தரமான சம்பவம் காத்துகிட்டு இருக்கு. எப்ப வேணா வரும் தயாரா இருங்க. இன்னிக்கு நைட் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி என்பன போல கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

7 மணிக்கு தான் தெரியுமா

7 மணிக்கு தான் தெரியுமா

வலிமை ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வருது தயாராகுங்கள் என்று மட்டும் தான் யுவன் ட்வீட் செய்துள்ளார். நேரம் எதையும் அவர் குறிப்பிடவில்லை. 10 மணிக்கு என மீடியாக்களில் தான் தகவல் பரவுகிறது. ஆனால் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் நேரத்தை இன்று இரவு 7 மணிக்கு தான் வெளியிட போகிறார்களாம்.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X