Don't Miss!
- Sports
மகளிர் ஐபிஎல் - 5 அணிகளுக்கான ஏலம் மூலம் ரூ. 4670 கோடி வருமானம்.. எந்த அணிகள் வாங்கியது.. விவரம்
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
- Lifestyle
பெண்கள் ஆண்களிடம் ரகசியமாக எதிர்பார்க்கும் 'அந்த' குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்ககிட்ட இதெல்லாம் இருக்கா?
- News
"மசாஜ் சென்டர்".. சிக்க போகும் முக்கிய பிரமுகர்கள்.. யாரந்த "கருப்பு ஆடுகள்".. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
- Technology
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
வலிமை ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்... வெளியானது புதிய தகவல்!
சென்னை : நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச். வினோத்,அஜித் இணைந்துள்ள திரைப்படம் வலிமை.
Recommended Video
காலா படத்தில் ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஹுமா குரேஷி இதில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அட்டகாசமான அப்டேட்களை அடுத்தடுத்து வெளியிட்டிருந்த நிலையில் இப்பொழுது வலிமை ஓடிடி உரிமை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
வலிமை மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. என்னம்மா மிரட்டுறாரு தல.. டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்!

அபார வெற்றி
தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக இவருக்கும் நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வெற்றி பெற்று வருகிறது. கமர்சியல் மட்டுமல்லாமல் சமூக அக்கறைகொண்ட கதைகளிலும் அஜித் நடித்து வருகிறார். அந்த வகையில் எச்.வினோத்துடன் முதல்முறையாக இணைந்து நடித்த நேர்கொண்ட பார்வை அபார வெற்றி பெற்றது. நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இணைந்துள்ளனர் .

வலிமை அப்டேட்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு இதன் பின்னர் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தது. இந்த படத்தை பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்து வர சமூக வலைதளங்களில் அடிக்கடி வலிமை அப்டேட் குறித்த கேள்விகள் ரசிகர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

மாஸ் காட்டியது
இந்நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நேற்று மாலை அதிரடியாக ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு மாஸ் காட்டியது. போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே லைக்குகளை அள்ளிய ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. மோஷன் போஸ்டர் மகிழ்ச்சியில் இருந்து வெளிவருவதற்கு முன்னரே அடுத்தடுத்து 5 மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு மாஸ் காட்டியிருந்தது படக்குழு.

போலீஸ் அதிகாரி
அதில் நடிகர் அஜித் அதே இளமையுடன் செம ஸ்டைலிஷாக இருக்கிறார். போஸ்டர் முழுவதும் பைக் ரேசிங் குறித்த ரெபரன்ஸ் அதிக அளவிலேயே உள்ளதால் இது ஒரு பக்காவான ரேசிங் சார்ந்த பட்ட ஆக்சன் படம் என்பது ஊறுதியாகி உள்ளது. அதேசமயம் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். காலா படத்தில் ஜரினா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஹூமா குரேஷி இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜி5 நிறுவனம்
வலிமை படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுற்ற நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளது. இதற்காக வரும் 16ஆம் தேதி படக்குழு ஹைதராபாத் செல்ல உள்ளது. இந்த நிலையில் வலிமை ஓடிடி குறித்த முக்கியமான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை ஜி5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை வாங்கியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. படம் இந்த ஆண்டு திரையில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.