வலிமை, ஆர்ஆர்ஆர், விஜய்யின் பீஸ்ட் டிரைலர் வந்தாச்சு...அடுத்து என்ன ?

சென்னை : 2022 ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களான வலிமை, ஆர்ஆர்ஆர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் ரிலீசாகி விட்டன. அடுத்து என்ன வர போகிறது என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

2022 ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வரிசையாக அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. விஜய்யின் பீஸ்ட் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இதை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் ரிலீசாக உள்ளது. கமல் நடிக்கும் விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்து என்ன வர போகிறது என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

அடுத்து என்ன வர போகுது

அடுத்து என்ன வர போகுது

ரசிகர்களின் எதிர்பார்ப்பு லிஸ்டில் அடுத்து இருப்பது அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 61 படம் தான். இந்த படத்தின் ஷுட்டிங் மார்ச் மாதமே துவங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து தள்ளிப் போகிறது. லேட்டஸ்ட் தகவலாக, ஏப்ரல் 6 ம் தேதி ஏகே 61 ஷுட்டிங் ஐதராபாத்தில் துவங்கப்பட உள்ளதாம். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சாலை போன்ற பிரம்மாண்ட செட்டில் தான் முதல் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாம்.

 வேற லெவல் மாசா இருக்கும்

வேற லெவல் மாசா இருக்கும்

வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டது தான் ஏகே 61 படத்தின் கதை என்றாலும் இதில் வலிமை படத்தை போல் ஆக்ஷன் காட்சிகள் இருக்காதாம். இன்டர்வெலின் போதும், க்ளைமாக்சின் போது மட்டுமே சண்டை காட்சிகள் இருக்குமாம். அதே சமயம் மாஸான சீன்கள், வசனங்கள் அதிகமாகவே இருக்குமாம். வலிமை படத்தில் கிடைத்த விமர்சனங்களுக்கு பதிலடிக்கும் கொடுக்கும் வகையில் ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்க போகிறாராம்.

 பக்காவான பிளான் ரெடி

பக்காவான பிளான் ரெடி

ராமோஜி ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து புதுச்சேரி, ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் ஏகே 61 ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாம். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்தாலும் வயதான கெட்அப்பில் வில்லன் ரோலில் அஜித் வரும் காட்சிகள் செம மாசாக உருவாக்கப்பட போகிறதாம்.

Recommended Video

திருநெல்வேலி: 'பீஸ்ட்' ட்ரைலர் பார்த்த குஷியில்... தியேட்டரில் சீட்டுக்களை உடைத்த விஜய் ரசிகர்கள்!
15 நாள் காத்திருக்கனுமா

15 நாள் காத்திருக்கனுமா

ஏகே 61 ஷுட்டிங் ஏப்ரல் 6 ம் தேதி துவங்கும் என்றாலும், படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றிய தெரிந்து கொள்ள நாம் இன்னும் 15 நாட்கள் காத்திருக்க வேண்டுமாம். ஏகே 61 ஷுட்டிங் ஆரம்பிக்கும் நாளில் தான் உண்மையான ஃபீஸ்ட் காத்திருப்பதாக ரசிகர்கள் ஆர்வமாக தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே AK61 ஹேஷ்டேக் ட்விட்டரில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X