அந்தரத்தில் பைக்கில் டைவ் அடிக்கும் அஜித்...டிரெண்டிங்கில் அடித்து நொறுக்கும் வலிமை
சென்னை : வலிமை ரிலீசை முன்னிட்டு தொடர்ந்து ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர். அந்த வரிசையில் இன்று போனி கபூர் வெளியிட்டுள்ள பைக்குடன் ஏர் டைவிங் செய்யும் ப்ரோமோ அனைவரையும் வாய் பிளந்து ரசிக்க வைத்துள்ளது.
பல தடைகளை தாண்டி ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ரிலீசாக உள்ள இந்த படமும் அஜித்தின் வழக்கமாக வியாழக்கிழமை சென்டிமென்ட் படியே ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்திற்கும் வி என்ற எழுத்திலேயே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

வலிமை தினமும் 7 ஷோவா
நான்கு மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உலகம் முழுக்க ரிலீஸ் செய்யப்பட உள்ள வலிமை படத்தின் முதல் நாள் ஷோவிற்கான டிக்கெட்கள் இப்போதே விற்று தீர்ந்து விட்டன. இருந்தாலும் அஜித் படம் என்பதால் முதல் நாள் முதல் ஷோவிலேயே பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு துவங்கி நான்ஸ்டாப்பாக 7 ஷோக்கள் முதல் வாரத்தில் திரையிடப்பட உள்ளதாம்.

போனி கபூரை கலாய்த்த நெட்டிசன்கள்
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை பெங்களூருவில் நடத்த ஏற்பாடு செய்துள்ள போனி கபூர், தினம் ஒரு ப்ரோமோ வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறார். அம்மா பாடல் ப்ரோமோ வீடியோ தவிர மற்ற அனைத்தும் ஒரே மாதிரி உள்ளது. இந்த பைக் ரேஸ் சீனை விட்டா படத்தில் வேறு சீனே இல்லையா. நீங்கள் ப்ரோமோவே வெளியிட வேணாம். ப்ரோமோ வெளியிட சொன்னால் மொத்த படத்தையும் இப்போதே வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்களே என போனி கபூரை ரசிகர்கள் கடந்த சில நாட்களாக கலாய்த்து வருகின்றனர்.

ஏரில் அஜித்தின் டைவிங்
இந்த பெயரை மாற்றுவதற்காக இன்று வித்தியாசமான ப்ரோமோ ஒன்றை போனி கபூர் வெளியிட்டுள்ளார். இதில் ஏரில், கழுத்தே வலிக்கும் அளவிலான உயரத்தில் அஜித் மற்றும் கார்த்திகேயா, ரேஸ் பைக்குடன் டைவ் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அடேங்கப்பா இந்த சீனை எப்படி எடுத்தீங்கள், அவர்கள் எப்படி நடித்தார்கள் பயமில்லாமல் என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

15 நிமிடத்தில் டிரெண்டிங்
போனி கபூர் வெளியிட்ட இந்த ப்ரோமோ வீடியோ, வெளியிடப்பட்ட 15 நிமிடத்திலேயே ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப் இடத்தை பிடித்தது. #ValimaiPromo என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. செம வைரலாகி, லைக்குகளை குவித்து வருகிறது இந்த ப்ரோமோ வீடியோ.


Click it and Unblock the Notifications











