இன்று வலிமை செகண்ட் சிங்கிள்...அடுத்த வாரம் டீசர்...உற்சாகத்தில் தல ஃபேன்ஸ்

சென்னை : கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது அஜித்தின் வலிமை படம். ஹச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள இரண்டாவது படம் இதுவாகும்.

அஜித், ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சட்ட விரோத பைக் ரேஸை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அஜித் போலீஸ் ஆபீசர் ரோலில் நடித்துள்ளார்.

வைரலாக்கிய ரசிகர்கள்

வைரலாக்கிய ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக விடாது அப்டேட் கேட்ட பிறகு சமீபத்தில் ஜுலை மாதம் இந்த படத்தில் ஃபஸ்ட் சிங்கிள் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஃபஸ்ட் சிங்கிள், ஃபஸ்ட் க்ளிம்ப்ஸ் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. தல ரசிகர்கள் வலிமை படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் வேற லெவலில் வைரலாக்கி வந்தனர்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியிடப்பட்டதால் இந்த ஆண்டு தீபாவளிக்கே வலிமை படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்நிலையில் வலிமை படத்தை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக போனி கபூர் அறிவித்தார். ஆனால் தேதி அறிவிக்கவில்லை.

டிக்கெட் புக்கிங் துவக்கம்

டிக்கெட் புக்கிங் துவக்கம்

ஆனால் ஜனவரி 12 ம் தேதி தான் வலிமை படம் ரிலீசாக உள்ளதாக மதுரையில் சில தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங்கே நடைபெற துவங்கி விட்டது. அதே சமயம் ஜனவரி 13 ம் தேதி வலிமை ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சில தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் இன்று வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று செகண்ட் சிங்கிள்

இன்று செகண்ட் சிங்கிள்

இன்று மாலை 7 மணிக்கு வலிமை செகண்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட உள்ளதாம். அதாவது அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி இன்று மாலைக்கு மேல் வெளியிடப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து அடுத்த வாரம் வலிமை படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் மீண்டும் வலிமை ஹாஷ்டேக்கை உருவாக்கி, அதை டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

படக்குழு திட்டம்

படக்குழு திட்டம்

கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டை முன்னிட்டு வலிமை படத்தின் டிரைலர் வெளியிடப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் அதற்கான எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X