போட்றா வெடிய... கன்ஃபார்ம் ஆன வலிமை ரிலீஸ் தேதி...எப்போ தெரியுமா ?

சென்னை : தல அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படம் பற்றிய அப்டேட்டை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

படத்தின் ஃபஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், ஃபஸ்ட் க்ளிம்ப்ஸ், ஃபஸ்ட் சிங்கிள் என அனைத்தையும் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பால் சாதனையிலும் ஃபஸ்டாக இருந்து வருகிறது. இதன் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

வலிமை படத்தில் ஷுட்டிங் சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி, ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளி ரிலீசை அறிவிக்காமல், 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். ஆனால் தேதி என்னவென்று அவர் உறுதியாக சொல்லவில்லை.

 தல பொங்கல்

தல பொங்கல்

போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதால் மட்டுமே ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ரிலீஸ் தேதி உறுதியாக தெரியாவிட்டாலும், தல பொங்கல் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் ஷுட்டிங் முடிவதற்கு முன்பே ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் விறுவிறுப்பாக நடக்க துவங்கி விட்டது.

பைக் டிரிப் போன அஜித்

பைக் டிரிப் போன அஜித்

வலிமை எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில் அஜித், சென்னையில் துவங்கி இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பைக் டிரிப் சென்று விட்டு, தீபாவளிக்கு தான் வீட்டிற்கு திரும்பி வந்தார். இருந்தாலும் அஜித்தின் பைக் டிரிப், குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஃபோட்டோக்கள் தொடர்ந்து வெளிவந்து வைரலானது.

இது தான் வலிமை கதை

இது தான் வலிமை கதை

சட்ட விரோத பைக் ரேஸ், கொலைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு பெயர் போன சாத்தான் ஸ்லேவ் பைக்கர்கள் கேங்கை வளைத்து பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக தான் வலிமை படத்தில் அஜித் நடித்துள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. இதில் அஜித்திற்கு ஜோடியாக இல்லாமல் பெஸ்ட் ஃபிரண்ட் ரோலில் தான் ஹுமா குரேஷி நடித்துள்ளாராம். முரட்டு சிங்கிளாக தான் அஜித் நடித்துள்ளாராம்.

ரிலீஸ் தேதி என்ன

ரிலீஸ் தேதி என்ன

லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இறுதி செய்து விட்டதாம். 2022 ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி தான் வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். அதாவது ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் ரிலீசிற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்.

 சென்டிமென்ட்டை கைவிட்ட அஜித்

சென்டிமென்ட்டை கைவிட்ட அஜித்

அஜித்தின் வழக்கமான வியாழக்கிழமை செட்டிமென்ட் கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக புதன்கிழமை வலிமை படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள். போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாம். டிசம்பர் மாதத்தில் வலிமை படம் சென்சார் போர்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X