வலிமையில் அஜித்திற்கு எத்தனை வில்லன்... ரகசியம் காக்கும் டீம்

சென்னை : அஜித் தற்போது வலிமை படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, தனது ஃபேவரைட் பிஎம்டபிள்யூ பைக்கில் இந்தியாவை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் பைக்கில் சாய்ந்தபடி தார் பாலைவனத்தில் ரிலாக்ஸ் செய்த அஜித்தின் ஃபோட்டோக்கள் வெளியாகி செம வைரலாகின.

அதே சமயம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டும், தல அஜித் என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். வலிமை படம் பற்றிய அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வைரலான வலிமை க்ளிம்ப்ஸ்

வைரலான வலிமை க்ளிம்ப்ஸ்

வலிமை படத்தில் ஃபஸ்ட் சிங்கிள், க்ளிம்ப்ஸ் ஆகியன சமீபத்தில் வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே இவைகள் செம வைரலாக்கப்பட்டன. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் என போனி கபூர் அறிவித்து விட்டார். ஆனால் ரிலீஸ் தேதி இதுவரை வெளியிடப்படவில்லை. படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, வலிமை படத்தின் வில்லன்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

எத்தனை வில்லன்கள்

எத்தனை வில்லன்கள்

ரசிகர்கள் வலிமை டிரைலருக்காக காத்திருக்கும் நிலையில், சில உறுதி செய்துள்ள தகவலின்படி, வலிமை படத்தில் அஜித்திற்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வில்லன்கள் உள்ளார்களாம். அதே சமயம் கார்த்திகேயா தவிர மற்ற யாரெல்லாம் வில்லன் ரோலில் நடித்துள்ளார்கள் என்ற தகவல் தொடர்ந்து ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

Recommended Video

Vivek சார்கூட நடித்த அனுபவம் | Actress Keerthana P-03 |Rewind Raja | Filmibeat Tamil Filmibeat Tamil
இவர் தான் டப்பிங் பேசினாரா

இவர் தான் டப்பிங் பேசினாரா

இந்நிலையில் பிரபல டப்பிங் கலைஞரான அலெக்சாண்டர், வலிமை படத்தில் வில்லன்களில் ஒருவருக்கு தான் டப்பிங் பேசிய உள்ளதாகவும், இதை தான் மிகப் பெரிய பெருமையாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அலெக்சாண்டர் தான் Marvel படத்தில் Loki க்கு தமிழ் டப்பிங் பேசியவர்.

அஜித்திற்கு ஜோடி கிடையாது

அஜித்திற்கு ஜோடி கிடையாது

ஹச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகி உள்ள வலிமை படத்தில் ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹுமா குரேஷி அஜித்தின் தோழியாக நடித்திருப்பதாகவும், ஜோடி கிடையாது எனவும் ஏற்கனவே கூறப்பட்டது. இந்த படத்தில் அஜித் முரட்டு சிங்கிள் கேரக்டரில் தான் நடித்துள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X