மாற்றப்பட்ட லொக்கேஷன்...வெளிநாடு பறக்கும் அஜித்... அடுத்தடுத்து வரும் வலிமை அப்டேட்

சென்னை : ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படம் கடந்த 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தை இதுவரை முடிக்க முடியாமல் படக்குழு திணறி வருகிறது. போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித், டைரக்டர் வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படம் இதுவாகும்.

இந்த படத்தில் ஹீரோயினாக ஹுமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கும் யுவன் சங்கர்ராஜா தான் இசையமைத்துள்ளார். வலிமை படத்திற்கு இசை அமைக்கும் பணிகளை கடந்த ஆண்டு மார்ச் மாதமே முடித்து விட்டதாக கூறிய யுவன், சமீபத்தில் கிளப்ஹவுசில் பேசுகையில் இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் ஒன்று உள்ளது எனவும் அப்டேட் வெளியிட்டார்.

அஜித்தின் 60 வது படம் என்பதாலும், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் என்பதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விடாமல் அப்டேட் கேட்டே வலிமை படத்தை வேல்ட் ஃபேமஸ் ஆக்கி விட்டார்கள் அஜித் ரசிகர்கள். இப்போது இந்த படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

சாதனை படைத்த வலிமை

சாதனை படைத்த வலிமை

இரண்டு ஆண்டுகளாக அப்டேட், ஃபஸ்ட்லுக் என எதுவும் இல்லாமலேயே இந்தியாவிலேயே ஆன்லைனில் அதிகமானவர்கள் சினிமா டிக்கெட் புக் செய்த படம் என சாதனையை வலிமை நிகழ்த்தி உள்ளது. இந்நிலையில் பல நாட்களாக இப்போ வருது, அப்போ வருது என சொல்லப்பட்டு வந்த வலிமை ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை கடந்த சில வாரங்களுக்கு முன் சஸ்பென்சாக வெளியிட்டார் போனி கபூர்.

ஆகஸ்ட் 15 ல் டீசர் ரிலீசா

ஆகஸ்ட் 15 ல் டீசர் ரிலீசா

அஜித் ரசிகர்களை இனியும் காக்க வைக்க கூடாது என வலிமை பற்றி அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு, ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது வலிமை படக்குழு. வலிமை படத்தின் டீசரை ஆகஸ்ட் 15 ம் தேதி வெளியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதையும் டிரெண்டிங் ஆக்கி கொண்டாடி வருகிறார்கள் தல ரசிகர்கள்.

இன்று சிங்கிள் டிராக் வருதா

இன்று சிங்கிள் டிராக் வருதா

இதற்கு முன் ஆகஸ்ட் 2 ம் தேதியான இன்று வலிமை படத்தின் முதல் சிங்கிள் டிராக்கை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமா, இதோடு பாடலின் டைட்டிலையும் அவர் வெளியிட உள்ளாராம். இந்த பாடலின் முதல் வரி, நாங்க வேற மாதிரி என துவங்குகிறது என்று வேறு சொல்லி விட்டார்கள்.

வெளிநாடு செல்லும் வலிமை டீம்

வெளிநாடு செல்லும் வலிமை டீம்

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, வலிமை படக்குழு விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாம். அங்கு எடுக்கப்பட வேண்டிய அஜித் நடிக்கும் முக்கிய சண்டைக்காட்சிகளுடன், படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைய உள்ளதாம். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

5 நாள் தான் ஷுட்டிங்

5 நாள் தான் ஷுட்டிங்

அதிலும் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை ஐந்தே நாட்களில் எடுத்து முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர். மிக வேகமாக படப்பிடிப்பை முடிக்க டைரக்டர் வினோத் பக்காவாக பிளான் தயார் செய்து வைத்துள்ளாராம். வெளிநாட்டில் நடக்க உள்ள இந்த 5 நாள் ஷுட்டிங் தான் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பாம்.

அப்போ ஸ்பெயின் போகலையா

அப்போ ஸ்பெயின் போகலையா

இதோடு முக்கியமான கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக வலிமை டீம் ரஷ்யா செல்ல உள்ளதாம். வெளிநாட்டு படப்பிடிப்பு ஸ்பெயினில் நடத்தப்பட உள்ளதாக இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லொக்கேஷனை ரஷ்யாவிற்கு மாற்றி உள்ளார்களாம். இங்கு தான் முக்கிய சண்டைக்காட்சிகள் நடத்தப்பட உள்ளதாம்.

அதிக பைக் ரேஸ் காட்சி ஏன்

அதிக பைக் ரேஸ் காட்சி ஏன்

வலிமை படத்தில் அஜித், இளமை தோற்றத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது கூடுதல் தகவலாக, நகரில் சட்ட விரோதமாக பைக் ரேஸ் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசாக நடிக்கிறாராம் அஜித். அதனால் தான் இந்த படத்தில் அதிகமான பைக் ரேஸ் மற்றும் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X