வலிமை டீசர் ரிலீஸ் தேதி... மாஸாக வெளியான அசுத்தல் அப்டேட்

சென்னை : அஜித் நடித்துள்ள ஆக்ஷன், த்ரில்லர் படமான வலிமை அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டி உள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் படமாக உள்ளது வலிமை.

ஹச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேசவைத்த அஜித் ரசிகர்கள்

பேசவைத்த அஜித் ரசிகர்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் இடைவிடாமல் அப்டேட் கேட்டு, ட்விட்டர், விஐபி.,க்கள், கிரிக்கெட் மைதானம் என அனைத்து இடத்திலும் வலிமை பற்றி பேச வைத்தனர். ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

நாங்க வேற மாரி பாடல் சாதனை

நாங்க வேற மாரி பாடல் சாதனை

இதைத் தொடர்ந்து படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக நாங்க வேற மாரி பாடல் வெளியிடப்பட்டது. இதனை அஜித் ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கினர். யூட்யூப்பில் இந்த பாடல் 25 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

ஓயாது அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

ஓயாது அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

ஃபஸ்ட்லுக், ஃபஸ்ட் சிங்கிள் என வெளியிட்டாலும் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்பதை மட்டும் நிறுத்தவில்லை. சமீபத்தில் டைரக்டர் வெங்கட் பிரபுவிடம் வலிமை அப்டேட் கேட்டதற்கு அவர், இரண்டாவது சிங்கிள் ரெடியாகி விட்டதாகவும், விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறினார். ஆனால் செகண்ட் சிங்கிள் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மும்முரமான போஸ்ட் ப்ரொடக்ஷன்

மும்முரமான போஸ்ட் ப்ரொடக்ஷன்

இதற்கிடையில் இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற வலிமை படக்குழு, படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் நாடு திரும்பி உள்ளது. ரஷ்யா ஏர்போர்ட்டில் அஜித் நின்ற ஃபோட்டோ, வீடியோக்களும் வைரலாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ரஷ்யாவில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின் பிடிஎஸ் ஃபோட்டோக்களும் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்தது. தற்போது வலிமை படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.

ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் பண்ணுங்க

ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் பண்ணுங்க

இதனால் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. வலிமை இந்த தேதியில் ரிலீசாகலாம், அந்த தேதியில் ரிலீசாக வாய்ப்புள்ளது என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் வலிமை படக்குழு இதுவரை அதுபற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள், ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண சொல்லி விடாமல் கேட்டு வருகின்றனர்.

அண்ணாத்தவுடன் மோதுகிறதா

அண்ணாத்தவுடன் மோதுகிறதா

தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக பலர் கூறி வருகின்றனர். ஆனால் தீபாவளியான நவம்பர் 4 ம் தேதி ரஜினி நடித்த அண்ணாத்த படமும் ரிலீஸ் ஆவதால் அது படத்தின் வசூலை பாதிக்கும் என்பதால் ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு முன் மற்றொரு தேதியில் வலிமை படத்தை ரிலீஸ் செய்யலாம் என சிலர் வலிமை படக்குழுவினருக்கு யோசனை கூறி வருகின்றனர்.

டீசர் ரிலீஸ் அறிவிப்பு

டீசர் ரிலீஸ் அறிவிப்பு

ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருவதால். அவர்களை திருப்திபடுத்துவதற்காக டீசரை முன்கூட்டியே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். தற்போது நம்பிக்கையான சினிமா வட்டார தகவலின்படி, அடுத்த வாரம் வலிமை படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X