குட்டி ஸ்டோரியை முந்த முடியாத வலிமை...அடித்துக் கொள்ளும் தல – தளபதி ரசிகர்கள்

சென்னை : விஜய்யும், அஜித்தும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது மட்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வழக்கத்தை விட சமீப நாட்களாக தல, தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் மோதிக் கொள்வது அதிகமாகி வருகிறது.

அதிலும் ஹேஷ்டேகுகளை உருவாக்கி, அதை டிரெண்டிங் ஆக்குவதில் இவர்கள் நடத்தும் போர், பெரிய அக்கப்போராக இருந்து வருகிறது. அதிலும் இரண்டு ஸ்டார்களின் ரசிகர்களும் அவர்களின் புதிய படங்களை வைத்து மோதிக் கொள்வது, மற்றவர்களின் படங்களை கிண்டல் செய்வது என வழக்கமாக இருந்து வருகின்றனர்.

டிரெண்டிங் ஆன வலிமை

டிரெண்டிங் ஆன வலிமை

சமீபத்தில் அஜித்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனால் அதைத் கொண்டாட அஜித் ரசிகர்கள் வலிமை, வலிமை அப்டேட், வலிமை ஃபஸ்ட்லுக் போன்ற வலிமை தொடர்பாக ஹேஷ்டேகுகளை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கினர்.

போட்டிக்கு கத்தி ஹேஷ்டேக்

போட்டிக்கு கத்தி ஹேஷ்டேக்

இவை டிரெண்டிங் ஆன சிறிது நேரத்திலேயே கத்தி ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டது. என்ன விஷயம் என பார்த்தால், வலிமை மற்றும் கத்தி படங்களின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களை ஒப்பிட்டு, இவற்றில் பலரும் கருத்து பதிவிட்டு, மோதிக் கொண்டனர்.

ஹேஷ்டேக் போர்

ஹேஷ்டேக் போர்

அதைத் தொடர்ந்து யார் படத்தின் ஃபஸ்ட்லுக் அதிக பார்வைகளை, லைக்குகளை பெற்றது. எது சாதனையில் முதலிடம் பிடித்தது என இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்நிலையில் இதே போல் தற்போது மீண்டும் ஹேஷ்டேக் போர் ட்விட்டரில் நடந்து வருகிறது.

குட்டி ஸ்டோரியை முந்த முடியல

குட்டி ஸ்டோரியை முந்த முடியல

இரண்டு நாட்களுக்கு முன் அஜித்தின் வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. ஆனால் இது ரிலீஸ் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில், விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் குட்டி ஸ்டோரி பாடலின் சாதனையை முறிக்க தவறி விட்டது. இதனால் உடனடியாக விஜய் ரசிகர்கள், UnbeatableKuttiStoryRecords என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி விட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கா இந்த அக்கப்போரு

ஒரு மணி நேரத்திற்கா இந்த அக்கப்போரு

மாஸ்டர் படத்தின் லிரிக்கல் வீடியோவான குட்டி ஸ்டோரி பாடல் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வைகளையும், 1.04 மில்லியன் லைக்குகளையும் பெற்றது. ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அஜித்தின் வலிமை லிரிக்கல் வீடியோவான நாங்க வேற மாரி பாடல் , வெளியிடப்பட்ட 25 மணி நேரத்தில் தான் 9 மில்லியன் பார்வைகளை பெற்றது. அத்துடன் 1.01 மில்லியன் லைக்குகளை தான் பெற்றது.

 கடுப்பான அஜித் ரசிகர்கள்

கடுப்பான அஜித் ரசிகர்கள்

விஜய் ரசிகர்களின் செயலால் கடுப்பான அஜித் ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக Fastest1MLikesForVeraMaari என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். இதனால் யூட்யூப் டிரெண்டிங்கில் வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடல் டாப் இடத்திற்கு சென்றது.

நாங்க வேற மாரி

நாங்க வேற மாரி


வலிமை படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலான நாங்க வேற மாரி பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடி இருந்தார். அவருடன் இணைந்து அனுராக் குல்கர்னி இந்த பாடலை பாடி உள்ளார். இந்த பாடலின் வரிகளை டைரக்டர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார்.

தள்ளி போன மாஸ்டர் ரிலீஸ்

தள்ளி போன மாஸ்டர் ரிலீஸ்

விஜய் நடித்த மாஸ்டர் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இந்த படத்தின் லிரிக்கல் பாடலான குட்டி ஸ்டோரி பாடல் 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதமே ரிலீஸ் செய்யப்பட்டு விட்டது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா முதல் அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு, இந்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸ் செய்யப்பட்டது.

வலிமை இன்னும் முடியல

வலிமை இன்னும் முடியல

இதே போல் அஜித் நடிக்கும் வலிமை படம் 2019 ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் கொரோனா போன்ற பல காரணங்களால் படம் இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது. படத்தின் 90 சதவீதம் வேலைகள் முடிவடைந்து விட்ட நிலையில், வெளிநாட்டில் நடத்தப்பட வேண்டிய ஷுட்டிங் மட்டும் உள்ளது. முக்கியமான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் ஸ்பெயினில் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த காட்சிகளை ரஷ்யாவில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

வெளிநாடு செல்லும் வலிமைக்குழு

வெளிநாடு செல்லும் வலிமைக்குழு

விரைவில் இதற்காக வலிமை படக்குழு ரஷ்யா செல்ல உள்ளது. அங்கு 5 நாட்கள் மட்டும் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளது. மொத்தமே 10 ஷுட்டிங் தான் மீதமுள்ளது என தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் வலிமை படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X