காதலியை கரம்பிடிக்க ரெடி...திருமண தேதியை அறிவித்த வலிமை பட வில்லன்

ஐதராபாத் : வலிமை படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்துள்ளார் கார்த்திகேயா. இவர் தனது நீண்ட நாள் காதலியான லோஹிதா ரெட்டி என்பவரை விரைவில் திருமணம் முடிக்க போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

ஆகஸ்ட் 23 ம் தேதி மிக எளிய முறையில் தனிப்பட்ட குடும்ப விழாவாக இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் ராஜ விக்ரமார்காவில் நடைபெற உள்ளதாக கூறி, திருமண தேதியையும் அறிவித்துள்ளனர்.

சினிமா ஸ்டைலில் காதல்

சினிமா ஸ்டைலில் காதல்

சமீபத்தில் விழா ஒன்றில் கார்த்திகேயா திருமண தேதியை அறிவித்தார். அதில் அனைவரின் முன்னிலையிலும் முழங்காலிட்டு, லோஹிதாவிற்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் காதலை வெளிப்படுத்தினார் கார்த்திகேயா. சினிமா ஹீரோ போல் அவர் காதலை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது. அங்கு கூடியிருந்த ரசிகர்கள் இதை கைதட்டி பாராட்டினர்.

திருமண தேதி அறிவிப்பு

திருமண தேதி அறிவிப்பு

லோஹித்தாவிடம் காதலை சொன்ன மேடையிலேயே தங்களின் திருமணம் நவம்பர் 21 ம் தேதி நடைபெற உள்ளதாக கார்த்திகேயா அறிவித்தார். அப்போது லோஹிதாவை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் கார்த்திகேயா. இவர் என்னுடைய ஃபிரண்ட், கிரஷ், கேர்ள்ஃபிரண்ட், எக்ஸ் கேர்ஸ்ஃபிரண்ட், மீண்டும் ஃபிரண்ட், பெஸ்ட் ஃபிரண்ட், காதலி, இப்போது எனது வாழ்க்கை துணையாக போகிறார் என்றார்.

கார்த்திகேயாவின் வாக்குறுதி

கார்த்திகேயாவின் வாக்குறுதி

மேலும், இவள் பெருமைபடும் வகையில் நான் நடந்து கொள்வேன். நான் நடிகராக இருக்கிறேன். ஹீரோ ஆன பிறகு உன்னை திருமணம் செய்து கொள்ளவா என உன் அப்பாவிடம் கேள் என இவளிடம் கூறினேன். அதே போல் எனது வாக்குறுதியை நிறைவேற்றினேன். அதே போல் இன்றும் நான் வாக்குறுதி அளிக்கிறேன். இனியும் நீ பெருமை கொள்ளும் வகையில் நடந்து கொள்வேன் என மீடியாக்கள் முன்னிலையில் கார்த்திகேயா வாக்குறுதி அளித்தார்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

2010 ல் வாராங்கலில் ஒன்றாக படித்த போது தான் கார்த்திகேயா, லோஹிதா இருவரும் முதலில் சந்தித்தனர். பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கினர். கார்த்திகேயா நடித்த இரண்டாவது படம் ஆர்எக்ஸ் 100, 2018 ல் ரிலீசானது. கோலிவுட்டில் முதல் படமான வலிமை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

வைரலான போஸ்ட்

வைரலான போஸ்ட்

இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ள கார்த்திகேயா, 2010 ல் உன்னுடன் முதன் முதலில் பேசினேன். உன்னுடனான அற்புதமான பயணத்திற்கு நன்றி. நவம்பர் 21 ம் தேதி நீ என்னுடைய மனைவி ஆக போகிறாய். அது என்னை சந்தோஷமாக வைத்துள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். கார்த்திகேயாவின் இந்த போஸ்ட்செம வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X