என்னது...வணங்கான் ஷுட்டிங் இப்போ கிடையாதா...ஏன், என்ன காரணம்?

சென்னை : எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து விக்ரம், ராக்கெட்ரி படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யா, தற்போது டைரக்டர் பாலா இயக்கும் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் | ஜெயமோகனின் கதை? *Entertainment

டைரக்டர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்குடன் டைட்டில் நேற்று வெளியிடப்பட்டது. சூர்யா - பாலா இணைந்துள்ள படத்திற்கு வணங்கான என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

வணங்கான் படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் கன்னியாக்குமரி மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமங்கள், கடலோர பகுதிகளில் படமாக்கப்பட்டது. இது வழக்கமான பாலா படத்தை போல் இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

வீணாக கிளம்பிய வதந்தி

வீணாக கிளம்பிய வதந்தி

பாலா இயக்கும் படத்தை முடித்த பிறகு சூர்யா வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவைகளில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. விறுவிறுப்பாக வணங்கான் பட ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கையில் படம் பாதியில் நிறுத்தப்பட்டது, சூர்யா - பாலா இடையே மோதல் என பல விதங்களில் வதந்தி பரவியது.

அப்டேட் தந்து வாயடைத்த படக்குழு

அப்டேட் தந்து வாயடைத்த படக்குழு

இதனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் 32 நாட்களாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கட்ட ஷுட்டிங் ஜுலை மாதம் கோவாவில் துவங்கப்படும் என படக்குழு சார்பில் மே மாதம் விளக்கம் அளிக்கப்பட்டது. சூர்யாவும், மீண்டும் சூர்யா 41 பட செட்டில் இணைய காத்திருப்பதாக ட்வீட் போட்டிருந்தார்.

கோவாவில் ஷுட்டிங் கிடையாதா

கோவாவில் ஷுட்டிங் கிடையாதா

அதோடு, சூர்யா - பாலா தீவிர கதை டிஸ்கஷனில் இருக்கும் போட்டோ ஒன்றும் வெளியிடப்பட்டதால் வதந்திகள் முடிவுக்கு வந்தன. இருந்தாலும் இதுவரை இரண்டாம் கட்ட ஷுட்டிங் துவங்கப்படவில்லை. கோவா இல்லாமல் வேறு ஏதாவது இடத்தில் இரண்டாம் கட்ட ஷுட்டிகை நடத்தலாமா என படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு ஷுட்டிங் கிடையாதா

இப்போதைக்கு ஷுட்டிங் கிடையாதா

இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, வணங்கான் படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங், செப்டம்பர் மாதம் தான் துவங்கப்பட உள்ளதாம். மாற்று லொகேஷன் தேடப்பட்டு வருவதால் ஷுட்டிங்கை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யாவின் மற்ற படங்களும் தள்ளி போகுமா என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது தான் சூர்யாவின் பிளானா

இது தான் சூர்யாவின் பிளானா

இதனால் இந்த இடைப்பட்ட காலத்தை வீணடிக்க வேண்டாம் என சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க போகிறாராம் சூர்யா. இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட உள்ளதாம். சிறுத்தை சிவா படத்தின் முதல் கட்ட ஷுட்டிங்கை நிறைவு செய்த பிறகு தான் பாலா படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங்கில் சூர்யா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா கேரக்டர் என்ன

சூர்யா கேரக்டர் என்ன

வணங்கான் படத்தில் சூர்யா காது கேளாத, வாய் பேச முடியாத நபராக நடித்திருக்கிறாராம். இவரை காதலிக்கும் பெண்ணாக கீர்த்தி ஷெட்டியும், சூர்யாவின் தங்கை ரோலில் மமிதா பைஜுவும் நடிக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X