»   »  இன்று... வனமகன், அன்பானவன் அடங்காதவன் அசராதவன்!

இன்று... வனமகன், அன்பானவன் அடங்காதவன் அசராதவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று வெள்ளிக்கிழமை ஜெயம் ரவி நடித்த வனமகன், அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய இரு படங்களும் வெளியாகின்றன.

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பே படங்களை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பிலிருக்கும் தயாரிப்பாளர்கள், இந்த வெள்ளியன்று இரு முக்கிய படங்களையும் வெளியிடுகின்றனர்.

வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் இன்னும் பல படங்கள் வெளியாகவிருக்கின்றன.

ஹாரிஸ் ஜெயராஜ் 50

ஹாரிஸ் ஜெயராஜ் 50

ஹாரிஸ் ஜெயராஜுக்கு இது 50 வது படம். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது.

ட்ரிபிள் ஏ

ட்ரிபிள் ஏ

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை ட்ரிபிள் ஏ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். படத்துக்கும் யு ஏ சான்றுதான் தந்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிம்பு நாயகன்.

சிம்புவுக்கு முக்கிய படம்

சிம்புவுக்கு முக்கிய படம்

சிம்புவைப் பொறுத்தவரை, பாக்ஸ் ஆபீசில் இது மிக முக்கியமான படம். நல்ல எதிர்ப்பார்ப்பும் உள்ளது. அதிரடி ஆக்ஷன் ரொமான்டிக் மசாலாவாக வந்துள்ளது. அதிக அரங்குகளிலும் வெளியாகிறது.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இரு படங்களுமே ஓரளவு எதிர்ப்பார்ப்புக்கு உரிய படங்களாகவே உள்ளன. பாகுபலியின் வீச்சும் குறைந்துள்ளது. போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லாததால், ஆரம்ப வசூல் நன்றாக இருக்கும் என நம்புகிறார்கள்.

English summary
Today Friday there are 2 direct Tamil movies, ie, Vanamagan, Anbanavan Adangathavan Asarathavan are releasing worldwide.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil