»   »  ஜிஎஸ்டி-யிலிருந்து தப்பித்த 'வனமகன்'!

ஜிஎஸ்டி-யிலிருந்து தப்பித்த 'வனமகன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சயிஷா சைகல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வனமகன். வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள வனமகன் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

போகன் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் 'வனமகன்' மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. பேராண்மை படத்திற்கு பிறகு 'வனமகன்' படத்திலும் பழங்குடி இனத்தவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

வனமகன் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் ஜெயம்ரவி. இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் இல்லாவிட்டால் விஜய்க்கு மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் ஜெயம்ரவி.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

வனமகன் படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது தமிழக அரசு. சரக்கு சேவை வாரியான ஜிஎஸ்டி ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழ் திரையுலகிற்கு அளிக்கப்படும் வரிச்சலுகை இந்த ஜிஎஸ்டியால் ரத்து செய்யப்படவுள்ளது. தமிழில் தலைப்பு, யு சான்றிதழ் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்றும் தமிழ் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது தமிழக அரசு. ஜிஎஸ்டியால் பல மாற்றங்கள் தமிழ் திரையுலகிற்கு வரவுள்ளன.

வரிவிலக்கு

வரிவிலக்கு

இதனால் ஜூலை 1 க்கு முன்பே வெளியாகும் 'வனமகன்' படத்திற்கு வரிச்சலுகையை சீக்கிரமாகவே அறிவித்துள்ளது தமிழக அரசு. ஜூலை 1-க்குப் பிறகு வெளியாகும் படங்களுக்கு வரிச் சலுகை கிடைத்தாலும் பலனில்லை என்ற நிலை.

50வது படம்

50வது படம்

வனமகன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Jayam Ravi starrer Vanamagan movie has got tax free from Govt of Tamil Nadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil