»   »  இன்று முதல் மீண்டும் வனமகன், இவன் தந்திரன் மறு வெளியீடு!

இன்று முதல் மீண்டும் வனமகன், இவன் தந்திரன் மறு வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக தியேட்டர் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்து, இன்றிலிருந்து அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன.

இந்த தியேட்டர் ஸ்ட்ரைக்கால் ரொம்பவே பாதிக்கப்பட்டவை வனமகன், இவன் தந்திரன் போன்ற நல்ல படங்கள்தான். நான்கு நாட்கள் வசூல் இந்தப் படங்களுக்கு சுத்தமாக நின்று போனது. இன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் மீண்டும் இந்த இரு படங்களையும் மறுபடியும் ரிலீஸ் செய்துள்ளனர்.


வனமகன்

வனமகன்

விஜய் இயக்கத்தில் கடந்த 23-ஆம் தேதி வெளியான படம் வனமகன். ஜெயம் ரவி - சாயிஷா சேகல் இணைந்து நடித்த இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்துள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.


இவன் தந்திரன்

இவன் தந்திரன்

ஆர்.கண்ணன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் `இவன் தந்திரன்'. கௌதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியாக நடித்துள்ளனர்.


கதறிய இயக்குநர்

கதறிய இயக்குநர்

வனமகனாவது ரிலீசாகி ஒரு வாரத்துக்கு மேலாகிறது. ஆனால் இவன் தந்திரன் ரிலீசான மூன்றாவது நாளே தியேட்டர் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் பெரும் பாதிப்பு இவன் தந்திரனுக்கு. தன் படத்துக்கு இந்த கதி வந்துவிட்டதே என இயக்குநர் கண்ணன் கதறி அழுது வாட்ஸ்ஆப்பில் பதிவு வெளியிட்டார்.


மீண்டும் ரிலீஸ்

மீண்டும் ரிலீஸ்

திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், இந்த இரு படங்களையும் மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி படம் மறுபடியும் இன்று ரிலீசாகிறது.


Read more about: vanamagan, வனமகன்
English summary
Vanamagan and Ivan Thanthiran movies are going to re release today after 4 days Theater Strike withdrawn.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil