முக்கிய திருப்பங்களுடன்… விறுவிறுப்பாக நகரும்.. தெய்வமகள் !
சென்னை : ரசிகர்களின் மனம் கவர்ந்த நெடுந்தொடரான தெய்வ மகள் முக்கிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
தொலைக்காட்சிகள் புதிது புதிதாக தான் சீரியல்களை தயாரித்து ரசிகர்களை கவர முயற்சிப்பார்கள். பழைய சீரியல்களை மீண்டும் ஒளிபரப்புவது கொரோனா காலகட்டத்தில் தான் அதிகரித்தது. தற்போது நிலைமை சீரடைந்த பிறகும் சில சீரியல்களை மீண்டும் ஒளிபரப்புவது தொடர்கிறது.

அந்த வகையில், குடும்பங்களிடையே ஏகோபித்த வரவேற்பை வெற்ற தெய்வமகள் சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பல்வேறு முக்கிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

சத்யாவின் தங்கை ஓடிப்போக பிரகாஷை திருமணம் செய்து கொள்கிறார் சத்யா, புகுந்த வீட்டிற்கு சென்ற சத்யாவிற்கும் அண்ணியாருக்கும் நடக்கும் பனிப்போர் தற்போது தொடங்கி உள்ளது.

100 எபிசோடுகளை கடந்த இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரத்தில் வாணிபோஜன் நடித்துள்ளார். பிரகாஷாக கிருஷ்ணாவும், அண்ணியார் கதாபாத்திரத்தில் ரேகா கிருஷ்ணப்பாவும் நடித்துள்ளனர். இத்தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.



Click it and Unblock the Notifications











