»   »  பாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா.. - 'தெய்வமகள்' சத்யா பகீர்!

பாலியல் தொல்லை கொடுத்த தோழியின் அப்பா.. - 'தெய்வமகள்' சத்யா பகீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வாணி போஜனுக்கு நேர்ந்த கொடுமை- வீடியோ

சென்னை : சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தெய்வமகள்' சீரியலில் சத்யா என்ற கேரக்டரில் நடிப்பதன் மூலம் பலரது குடும்பத்திற்கும் வேண்டியவராகிவிட்டார் வாணி போஜன்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியில் பல துறை சார்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். இதில் பாலியல் தொல்லைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பேசிய வாணி போஜன், தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தை பற்றி வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

வாணி போஜன்

வாணி போஜன்

சினிமாவைப் போன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில் 'தெய்வமகள்' உள்ளிட்ட பல சீரியல்களுக்கு பலர் தீவிர ரசிகர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. 'தெய்வமகள்' சீரியல் நாயகி சத்யாவுக்கு (வாணி போஜன்) என்று தனியாக ரசிகர்களும் உண்டு.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

சமீபத்தில் நிறைவுபெற்ற 'தெய்வமகள்' சீரியல் வாணி போஜனை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. சத்யா எனும் போல்டான கேரக்டரில் நடித்து பல பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த வாணி போஜன் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வெளிப்படையாக

வெளிப்படையாக

திரையுலகிற்கு வரும் ஹீரோயின்களில் பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கின்றனர். சமீபமாக, பல நடிகைகளும் தாங்கள் துறையில் அனுபவித்த கஷ்டங்களை மீடியாவில் வெளிப்படுத்தி வருகின்றனர். சீரியல் நடிகை வாணி போஜன் இதுபற்றி வாய் திறந்துள்ளார்.

தோழியின் தந்தை

தோழியின் தந்தை

சத்யா 4-ம் வகுப்பு படிக்கும்போது அவரது தோழியின் வீட்டிற்கு சென்றாராம். அங்கு தோழியின் தந்தை, உன்னுடைய தோழி மேலே மாடியில் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார். சத்யாவும், அதனை நம்பி மாடிக்குப் போக, பின்னாலேயே வந்த அவர் கதவை பூட்டியுள்ளாராம்.

யாரிடமும் சொல்லவில்லை

யாரிடமும் சொல்லவில்லை

பின்பு, அவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார். இதனால் தனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தோழியிடமும் இதனை தெரிவிக்கவில்லையாம். ஒருவேளை அவர் தோழியிடம் சொல்லியிருந்தால், அவள் என்ன செய்திருப்பாள் என்றும் தெரியவில்லை" என்று கூறியுள்ளார் சத்யா.

English summary
Vani Bhojan became famous by acted in the role of Sathya in the 'Deivamagal' serial. Speaking recently, Vani Bhojan said openly about her childhood sexual harassment. Vani Bhojan has been sexually harassed by his friend's father.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X