»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

வாணி விஸ்வநாத்தை நினைவிருக்கிறதா. கேரளாவைச் சேர்ந்த இவர் மண்ணுக்குள் வைரம் படத்தில் சிறுமியாகஅறிமுகமாகி பின்னர் விஜய்காந்தின் பூந்தோட்டக் காவல்காரனில் ஹூரோயின் ஆனார்.

ஆனால், தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைக்காததால் காணாமல் போனார். பின்னர் தெலுங்கில் கவர்ச்சி, மசாலா,அதிரடி என தனது திறமையைக் காட்டி முன்னுக்கு வந்தார். கன்னடத்திலும் பல கவர்ச்சி ரோல்களைச் செய்துள்ளார்.

சமீப காலமாக தெலுங்கு, கன்னடத்திலும் சான்ஸ் குறைந்து போனதால் மலையாள சினிமாவுக்குத் திரும்பி வந்தார். அங்கும்வாய்ப்பில்லாததால் 8 மலையாள படங்களை தானே தயாரித்தார்.

டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். இந் நிலையில் கேரளத்தைச் சேர்ந்த துணை நடிகர் பாபு ராஜை திடீர் திருமணம்செய்து கொண்டுள்ளார் வாணி.

திருப்பதியில் இவர்களது திருமணம் நேற்று நடந்தது. பாபுராஜூம் தாயின் மணிக்கொடி உள்ளிட்ட சில தமிழ்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

வாணியின் தங்கை சில மாதங்களுக்கு முன் சென்னையில் விபச்சார வழக்கில் சிக்கினார். இவரும் மலையாளத்தில்நடித்து வருபவர் தான்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil