ரூ 1.25 கோடி கேட்ட லக்ஷ்மியிடம் ரூ 2.50 கோடி ரூபாய் கேட்ட வனிதா.. சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்!

சென்னை: தன்னிடம் ஒன்னேகால் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் இரண்டரை கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை வனிதா.

Recommended Video

Vanitha கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது? மருப்பு தெரிவித்த NanjilVijayan

நடிகை வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் தனக்கு உதவுமாறு லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்டார்.

அதற்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உதவுவதாக உறுதியளித்தார். இதனால் கடுப்பான வனிதா ஊடகம் ஒன்றின் நேர்க்காணலில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை சரமாரியாக விளாசினார்.

கெட்ட வார்த்தைகள்

கெட்ட வார்த்தைகள்

அவரது வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் போடி வாடி என படு கேவலமாக பேசினார். கெட்ட வார்த்தைகளை கொட்டி தீர்த்த வனிதா, நீ என்ன பத்தினியா என்று கேட்டும் மோசமாக பேசினார். சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினார்.

விளாசிய வனிதா

விளாசிய வனிதா

அதோடு லக்ஷ்மியின் கணவரான ராமகிருஷ்ணனையும் படு கேவலமாக பேசினார். அந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதா. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் அவரை விளாசி வந்தார்.

ரூ. 1.25 கோடி

ரூ. 1.25 கோடி

இதனைத் தொடர்ந்து தன்னை தரக்குறைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த வனிதா, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதோடு நஷ்ட ஈடு வேறு கேட்டு மிரட்டுகிறார் என்றார்.

வனிதாவும் நோட்டீஸ்

வனிதாவும் நோட்டீஸ்

இந்தநிலையில் தற்போது வனிதாவும் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு கூறி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நடிகை வனிதா விஜயகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

செகன்ட் இன்னிங்ஸ்

செகன்ட் இன்னிங்ஸ்

ஏற்கனவே இருவரும் டிவிட்டரில் மாறி மாறி விளாசி வருகின்றனர். இந்நிலையில் பதிலுக்கு வனிதாவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அவர்களுக்கு இடையிலான மோதலின் செகன்ட் இன்னிங்ஸ் நோட்டீஸ் மூலம் தொடங்கியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X