Don't Miss!
- Finance
கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் !
- Sports
மார்கன், ரஸ்ஸல் விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்... பர்ப்பிள் கேப் ஓட்டத்தில் முதலிடத்தில் ஆர்சிபி பௌலர்!
- News
50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை!
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Lifestyle
க்ரீமி சிக்கன் கிரேவி
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்தடுத்து படங்கள்.. வனிதா அக்கா ரொம்ப பிஸி.. விரைவில் அனல் காற்று ஃபர்ஸ்ட் லுக்கு ரிலீஸாம்!
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் தான் நடித்து வரும் அனல் காற்று படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயக்குமார். மூன்றாவது திருமணம், பிரிவு என அதிகம் செய்திகளில் அடிப்பட்டு வந்தார்.
இன்று தொடங்குகிறது தனுஷின் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்.. குஷி மோடில் ரசிகர்கள்!
இருந்தபோதும் தனது வேலையில் கண்ணும் கருத்துமாக உள்ளார். கலக்கப்போவது யார், குக் வித் கோமாளி என கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி வருகிறார்.

சரக்குடன் போஸ்
அதோடு சமையலுக்கான யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார் வனிதா. அண்மையில் மாலத்தீவில் கையில் சரக்குடன் அவர் போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி இணையத்தை கலக்கியது. இந்நிலையில் வனிதா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியுள்ளார்.

ஹரி நாடாருக்கு ஜோடி
2கே அழகானது காதல் என்ற படத்தில் கமிட்டானார் வனிதா. இந்தப் படத்தில் நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் ஹரி நாடாருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

அனல் காற்று அப்டேட்
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அண்மையில் வெளியானது. இந்நிலையில் வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் தான் நடிக்கும் மற்றொரு படம் குறித்த தகவலை ஷேர் செய்துள்ளார். அதாவது, வனிதா நடிக்கும் அனல் காற்று படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹீரோயினை மையமாக வைத்து
பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம் தாசன் இப்படத்தை இயக்கி வருகிறார். ஹீரோயினை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரோலர் கோஸ்டர் எமோஷன்ஸ்
இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டியுள்ள வனிதா, அனல் காற்று பயணம் நன்றாக முடியும் தருவாயில் உள்ளது. ரோலர் கோஸ்டர் எமோஷன்ஸுடன் ஒரு அழகான ஸ்க்ரிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. லிசி தனது வாழ்க்கையில் சந்தித்த அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக போராடிய அவரது விடாமுயற்சி மற்றும் மன வலிமைக்காக நினைவு கூறப்படுவார். ஃபர்ஸ்ட் லுக் கம்மிங் சூன்.. என பதிவிட்டுள்ளார்.