வனிதா - ராபர்ட் மாஸ்டர் இடையே வெடித்த மோதல்.. மிஸஸ் அண்ட் மிஸ்டர் படப்பிடிப்பில் என்ன நடந்தது?

சென்னை: தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தான் வனிதா விஜயகுமார். இவர் இயக்குனராக அறிமுகமாகி படம் தான் 'மிஸஸ் & மிஸ்டர்' இந்த திரைப்படம் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் பார்த்த பலரும் படத்தை கழுவி ஊற்றும் அளவிற்கு மோசமாக எடுத்து வைத்து இருந்தார். இந்த படத்தை அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்து இருந்தார். இதில், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

நடிகை வனிதாவுடன் சில ஆண்டுகள் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ராபர்ட் மாஸ்டருடன் இந்த படத்தில் சேர்ந்து நடித்து இருந்தார். இதனால், இரண்டு பேரும் மீண்டும் சேர்த்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட இருவரும் ஒன்றாக கலந்து கொள்ளவில்லை. இது குறித்து செய்தியாளர் வனிதாவிடம் கேட்டபோது ராபர்ட்டுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் அவர் கலந்து கொள்ளவில்லை என பேசி சமாளித்தார்.

Vanitha Vijayakumar Robert Master
Photo Credit:

கண்கலங்கிய ராபர்ட்: அண்மையில் ராபர்ட் மாஸ்டரின் அம்மா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அப்போது, ராபர்ட் மாஸ்டர் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி வழியனுப்பி வைத்தார். அந்த இறுதிச் சடங்கில், வனிதா அவருடைய மகள் ஜோவிகா இருவருமே கண் கலங்கியபடி இருந்தார்கள். இதைத் தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது வனிதா பற்றி விஷயங்களை பேசினார். என்னுடைய அம்மாவிற்கு வனிதாவை பிடிக்கவே பிடிக்காது. மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் நடித்ததில் அவர்களுக்கு விருப்பமே இல்லை. வனிதா என்னை முதலில் இயக்குனராக தான் புக் செய்தார்கள். அனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது வனிதா தான் இயக்குநர் என்று, இதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும் ஜோவிகாவிற்காக நான் அந்த படத்தில் நடித்தேன்.

மீண்டும் மோதல்: அப்படி இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் சமாளிக்கவே முடியவில்லை. என்னுடைய பாஸ்போர்ட் வனிதாவிடம் தான் இருந்தது. பாஸ்போர்ட் மட்டும் என்னிடம் இருந்து இருந்தால், இந்தியாவிற்கு வந்து எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி இருப்பேன். வனிதாவை பற்றி அனைவருக்கும் தெரியும். அவரை யாராலும் மாற்ற முடியாது. அதனால் வேறு வழி இல்லாமல் நானே மாறிக்கொண்டு அந்த படத்தில் நடித்து கொடுத்தேன் என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை வனிதா, தன்னுடைய instagram பக்கத்தில் ''உருட்டு உருட்டு பப்ளிசிட்டிக்காக நீ என்னவேணும்னாலும் உருட்டு'' என ஒரு பதிவினை போட்டு இருந்தார். இதைப்பார்த்த இணைவாசிகள் பலர், வனிதா நீங்க திருந்தவே மாட்டீங்க என்றும், ராபர்ட் மாஸ்டர் சொல்வது தான் உண்மை அதனால் தான் அவர் ப்ரோமோஷனில் கூட கலந்து கொள்ளவில்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்து சென்ற வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்திற்காக ஒன்று சேர்ந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X