Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
டயலாக் எழுதி கொடுத்தா கூட பேசுவாங்களான்னு தெரியலையே.. பிக் பாஸ் சீசன் 6ஐ வெளுத்து வாங்கிய வனிதா!
சென்னை: பிக் பாஸ் போட்டியாளரான வனிதா விஜயகுமார் இந்த சீசனை கழுவி ஊற்றியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. போட்டியாளர்கள் கன்டென்ட் கொடுக்கவே திணறுகின்றனர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆரம்பத்தில் பிரபல நடிகர்கள், நடிகைகள் என பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் வந்த நிலையில், ரசிகர்கள் அதிகம் அந்த நிகழ்ச்சியை ரசித்து பார்க்க ஆரம்பித்தனர்.
ஆனால், அதன் பின்னர் முழுக்க முழுக்க விஜய் டிவி சீரியல் நடிகர்களே அதிக அளவில் பங்கேற்று வருவதால் நிகழ்ச்சி மீது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ஈர்ப்பு இல்லை என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
என்
டிரெஸ்
பிரச்சனையே
இல்லை..
கிளம்பிய
கைது
சர்ச்சை..
விளக்கம்
கொடுத்த
பிக்
பாஸ்
பிரபலம்!

சர்ச்சைக்கு பஞ்சம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியே அதில் கிளம்பும் புது புது சர்ச்சைகள் தான். ஆனால், கடந்த சில சீசன்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி மோசம் அடைந்து வருவதாக ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்களே குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர். புதிதாக டாஸ்க் கூட கொடுக்க தெரியாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதே பார்த்து புளித்துப் போன கிராமம் vs நகரம், நரகம் vs சொர்க்கம், பள்ளி, கல்லூரி டிராமா என மொக்கைப் போட்டு வருகின்றனர்.

வனிதா விஜயகுமார் விளாசல்
பிக் பாஸ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளரான வனிதா விஜயகுமார் யூடியூப் சேனலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விமர்சிப்பதற்கு கூட ஒரு விஷயமும் நடக்க மாட்டுதே என ரொம்பவே ஆதங்கப்பட்டு சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிய அவர் கழுவி ஊற்றிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ரொம்ப மொக்கை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என பிக் பாஸ் போட்டியாளர்கள் விளையாடி வருவதை பார்த்தாலே எரிச்சலாக இருக்கு என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வரும் நிலையில், போட்டியாளர்கள் யாருக்குமே ஸ்டஃப் இல்லை என்றும் லாரி லாரியா கன்டென்ட் உள்ள ஆட்களை இறக்க ரசிகர்கள் ரெடியாக இருக்கும் நிலையில், விஜய் டிவி பற்றும் பனிஜை க்ரூப் தொடர்ந்து கன்டென்ட் இல்லாத போட்டியாளர்களை ஏன் உள்ளே அனுப்புகின்றனர் என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்தா கூட
இந்த சீசன் போட்டியாளர்களுக்கு சீன் பேப்பரோட ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுத்தா கூட சரியா பண்ணுவாங்களான்னு சந்தேகமா இருக்கு என வனிதா விஜயகுமார் கடுமையாக விமர்சித்ததை கேட்ட ரசிகர்கள் அவரது கருத்தை ஆமோதித்து வருகின்றனர். சண்டை கூட ஏதோ போடணும் என்கிற பெயருக்கு ஃபேக்கா போடுறாங்க.. ரியாலிட்டியே இல்லை என பிக் பாஸ் ரசிகர்கள் இந்த சீசனை பார்ப்பதையே பெருமளவு குறைத்துக் கொண்டதாக கமெண்ட்டுகள் பறக்கின்றன.

கமல் தொடர்வாரா
மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ என பில்டப் செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில சீசன்களாக டிஆர்பியை பிடிக்கவே சிரமப்பட்டு வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கமல் நடத்துவதால் தான் பிக் பாஸ் ஷோ அதன் ஆக்ரோஷத்தை விட்டு விட்டு உப்பு சப்பு இல்லாமல் உள்ளது என்றும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.