திருமாவளவன் இப்படி செய்யலாமா? விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்தது தப்பு.. வனிதா விஜயகுமார் ஆதங்கம்!

சென்னை: ஒரு ரியாலிட்டி ஷோவில் உள்ள போட்டியாளருக்கு ஓட்டுப் போடுங்க என எப்படி சொல்லலாம் என திருமாவளவனுக்கு எதிராக கேள்வி எழுப்பி உள்ளார் வனிதா விஜயகுமார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி அரசியல் கேமாக டோட்டலாக மாறிவிட்டது என்றும் பிஆர் மற்றும் அரசியல் சப்போர்ட் இருப்பவர்கள் தான் இந்த போட்டியில் இனிமேல் வெற்றி பெற முடியும் என்கிற நிலைமைக்கு நிகழ்ச்சி மாறிவிட்டதாக திருமாவளவன் ட்வீட்டுக்கு பிறகு நெட்டிசன்கள் ட்வீட் போட்டு வந்த நிலையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் வனிதா விஜயகுமார் நேரடியாகவே ட்வீட் போட்டு இப்படி செய்யலாமா திருமாவளவன் எனக் கேட்டுள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசன் ஏன் இப்படி கடைசி நேரத்தில் மாறி விட்டது என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

மணிகண்டனுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ்

மணிகண்டனுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் கலந்து கொண்டார். அவருக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட் போட்டு வாக்கு சேகரித்தார். மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள்ளே வந்து தனது அண்ணனுக்கு ஆதரவு அளித்தார். ஆனால், மணிகண்டன் அந்த ஃப்ரீஸ் டாஸ்க் முடிந்த உடனே எலிமினேட் ஆகி வெளியேறினார்.

பிஆர் ஆதரவு

பிஆர் ஆதரவு

மணிகண்டனை தொடர்ந்து அசீமுக்கும் ஏகப்பட்ட பிஆர் டீம் சப்போர்ட் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. யூடியூப் விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி அசீமுக்காக விக்ரமனை எதிர்த்து ஏகப்பட்ட ட்வீட்கள் போட ஆரம்பித்தார். அசீம் மகாத்மா என்று அவர் ட்வீட் போட அவருக்கும் ஜோ மைக்கேலுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் முற்றியது.

விக்ரமனுக்கு திருமா சப்போர்ட்

விக்ரமனுக்கு திருமா சப்போர்ட்

இந்நிலையில், அரசியல்வாதி விக்ரமனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் ஆதரவு அளித்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. விக்ரமனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வோம் என்று வெளிப்படையாகவே திருமாவளவன் ட்வீட் போட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார் கேள்வி

வனிதா விஜயகுமார் கேள்வி

திருமாவளவன் ட்வீட் போட்டதை பார்த்து ஷாக்கான நடிகையும் முன்னாள் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக மதிப்புக்குறிய ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரும் சிட்டிங் எம்பியுமான திருமாவளவன் எப்படி வாக்கு சேகரிக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் விளையாட்டு

அரசியல் விளையாட்டு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்து டைட்டில் வின் பண்ணுவது தான் இதுவரை கேமாக இருந்தது. ஆனால், இப்போ இது பக்கா பொலிட்டிகல் பிளேயாக மாறிவிட்டது. அவங்க கட்சிக்காரருக்கு ஆதரவா அவரு ட்வீட் போட்டு இருக்காரு என வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X