Don't Miss!
- News
பரந்தூர் ஏர்போர்ட் உறுதி.. பிரச்சனையை தமிழ்நாடு அரசுதான் தீர்க்கனும்: மத்திய அமைச்சர் சிந்தியா
- Technology
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Sports
சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் கலக்கக் கூடாது.. கமலுக்கு கோரிக்கை வைத்த வனிதா விஜயகுமார்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை விக்ரமன் போட்டியாளராக அறிமுகம் ஆனதில் இருந்தே ஏகப்பட்ட அரசியல் வாடை நிகழ்ச்சியை தொற்றிக் கொண்டது. அதே போல அசீமுக்கும் திமுக சப்போர்ட் இருப்பது போன்ற பேச்சுக்களும் அடிபட்டன.
விக்ரமன் மற்றும் அசீமுக்கு இருக்கும் அளவுக்கு மற்ற போட்டியாளர்களுக்கு ஆதரவு இல்லாத நிலையில், சாதாரண மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெல்ல முடியாத என்கிற கேள்வியை நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் எழுப்பி உள்ளார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டான கமல் சார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இஷ்டத்துக்கு விமர்சனம் எழுதக் கூடாது... வாரிசு கண்டிப்பா 100 நாட்கள் ஓடும்: சரத்குமார் அதிரடி

திருமாவளவனுக்கு கேள்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விக்ரமன் வெல்ல வேண்டும் என்றும் அவரை வெற்றி பெறச் செய்ய வாக்களியுங்கள் என அதிரடியாக ட்வீட் போட்டது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. வனிதா விஜயகுமார் உடனே நீங்க எப்படி ஒரு ரியாலிட்டி ஷோவில் இன்ஃப்ளூயன்ஸ் செய்யலாம் என திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசியல் நுழையக்கூடாது
என் ஆழ் மனதில் இருந்து சொல்றேன். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோவாகவே இருக்க வேண்டும். அதில் அரசியல் ஒரு போதும் கலக்கக் கூடாது என வனிதா விஜயகுமார் தொடர்ந்து ட்வீட் போட்டு வருகிறார். மேலும், சாதாரண மனிதர் தான் மக்கள் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சியை வெல்ல வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

கமல் அனுமதிக்கக்கூடாது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேவையில்லாத அரசியல் கலப்பு இருப்பதற்கு அதன் ஹோஸ்டான கமல் சார் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளார். அடுத்த சீசனில் அரசியல் சார்புடைய போட்டியாளர்கள் பங்கேற்றால் அவர் தான் வின்னர் என ஆரம்பத்திலேயே தெரிந்து விடும் என்றும் விளையாட்டின் சுவாரஸ்யமே போய்விடும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

டைட்டில் யாருக்கு
அசீம் மற்றும் விக்ரமன் இருவரில் யார் டைட்டிலை தட்டிச் செல்லப் போகிறார் என பெரும் போட்டியே சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளது. இருவருக்கும் டைட்டில் வேண்டாம் ஷிவினுக்கு கொடுங்க என்றும் நமீதா மாரிமுத்து உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். விஜய் டிவி அமுதவாணனுக்கு டைட்டிலை கடைசியில் கொடுக்கப் போகுது என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன. இந்த வாரம் சனிக்கிழமை ஷூட்டிங் முடிந்த உடனே யார் வின்னர் என்பது தெரிந்து விடும்.