கேவலமான அக்கறை.. எந்த சப்போர்ட்டும் இல்லாம இந்தளவுக்கு வந்திருக்கேன்.. கடுப்பான வனிதா!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் காட்டமாக பதிவிட்டுள்ள டிவிட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

ஜாதகப்படி சீக்கிரம் நடக்கலாம் | Powerstar Srinivasan fun speech | pickup drop movie |Filmibeat Tamil

நடிகை வனிதா விஜயகுமார் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் பிரபலமானார்.

கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்த வனிதா அடுத்த சில மாதங்களிலேயே அவரை பிரிந்தார்.

மறுத்த வனிதா

மறுத்த வனிதா

இதனால் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார் வனிதா. அண்மையில் வனிதா ரகசியமாக நான்காவது திருமணம் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்த வனிதா எனது திருமணம் வெளிப்படையானதாகவே இருக்கும், 4வது திருமணம் என்பது வதந்தி என்றார்.

பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப்

பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப்

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன வனிதா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யார் விமர்சித்தாலும் உண்டு இல்லை என செய்து வருகிறார். இந்நிலையில் வனிதா நடிகர் பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.

கன்னத்துடன் கன்னம்

கன்னத்துடன் கன்னம்

இந்தப் படத்தின் போட்டோக்கள் அண்மையில் வெளியாகி பெரும் வைரலானது. இருவரும் திருமண கோலத்தில் இருப்பது, முத்தம் கொடுப்பது, கன்னத்துடன் கன்னம் வைத்து உரசுவது போன்ற நெருக்கமான போட்டோக்கள் வெளியானது.

40 கல்யாணம் கூட

40 கல்யாணம் கூட

இந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வனிதா, 4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணுவேன், என் இஷ்டம் என்றார். இதனால் மீண்டும் பேசு பொருளாகியுள்ளார் வனிதா.

எந்த ஆதரவும்

எந்த ஆதரவும்

இந்நிலையில் காட்டமாக ஒரு டிவிட்டை ஷேர் செய்துள்ளார் வனிதா. அதாவது, ஒரு கேவலமான அக்கறை.. வேலையில் பிஸியாக இருக்கிறேன். என்னுடைய கடின உழைப்புதான் எந்த ஆதரவும் இல்லாமல் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளது.

தகுதியான ஆட்டியூட்

தகுதியான ஆட்டியூட்

நான் என்னவோ அப்படிதான் இருக்கிறேன்.. எப்போதும் அப்படிதான் இருப்பேன். நான் ஒரு பெண்ணாக இருப்பதார் என் தலையை உயரமாகப் பிடித்துக் கொள்கிறேன்.. பெண்கள் உங்களுக்கு தகுதியான ஆட்டியூடை காட்டுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

எண்ணப்படி வாழுங்கள்

எண்ணப்படி வாழுங்கள்

வனிதாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் யாரை சொல்கிறீர்கள் எதற்காக இந்த பதிவு என கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் உங்கள் எண்ணப்படி வாழுங்கள், யாரைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vanitha வனிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X