ராணி எலிசபெத்கூட ஹேண்ட் ஷேக் பண்ணியிருக்கேன்.. வனிதா விஜயகுமார் பதிவிட்ட வேறலெவல் போஸ்ட்!

சென்னை: இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் காலமான செய்தி ஒட்டுமொத்த உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

96 வயதை கடந்த ராணி எலிசபெத் வயது மூப்புக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு கமல் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் யாருக்குமே தெரியாத சூப்பரான த்ரோபேக் அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து ராணி மறைவு

இங்கிலாந்து ராணி மறைவு

இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் எலிசபெத் ராணி வயது மூப்புக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கான இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது.

கமல் ட்வீட்

கமல் ட்வீட்

"எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்." என அவருடன் நடிகர் கமல் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து ட்வீட் போட்டிருந்தார்.

மருதநாயகம் பட விழாவில்

மருதநாயகம் பட விழாவில்

"25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்." என மருதநாயகம் படத் துவக்க விழாவில் அவர் கலந்து கொண்டது குறித்தும் பதிவிட்டுள்ளார் கமல்.

வனிதா விஜயகுமார் ட்வீட்

வனிதா விஜயகுமார் ட்வீட்

நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து நடிகை வனிதா விஜயகுமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட் உடன் இளம் பருவம் முதல் முதுமையடைந்த பருவம் வரை எலிசபெத் ராணி எப்படி அழகாக இருக்கிறார் என பாருங்கள் என்பது போல 4 புகைப்படங்கள் அடுக்கப்பட்டுள்ளன.

மகாராணியுடன் கை குலுக்கினேன்

மகாராணியுடன் கை குலுக்கினேன்

மேலும், வாழ்வில் மறக்கமுடியாத ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இரண்டாம் எலிசபெத் ராணி சென்னைக்கு வந்திருந்த போது, அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், அவருடன் கை குலுக்கி உள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு அமைத்து கொடுத்தவர் கமல் தான் என மருதநாயகன் சூட்டிங் ஆரம்பித்தபோது மகாராணியை சந்தித்த தனது பிளாஷ்பேக் ஸ்டோரியைஉம் வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X