Don't Miss!
- News
சென்சார் பூட்டு உடைப்பு..தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளை..திருவெறும்பூரில் பகீர் சம்பவம்
- Lifestyle
உங்க பர்ப்யூம்கள் நீண்ட நேரம் உங்களை வாசனையாக உணர வைக்க இத பண்ணுங்க போதும்...!
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சிக்காதீங்க.. போனில் மிரட்டினா பயப்பட மாட்டேன்.. வனிதா விளாசல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரை எந்தவொரு சத்தமும் காட்டாமல் சைலன்ட்டாக சென்று கொண்டிருந்த நிலையில், ஃபினாலே வாரத்தில் மிகப்பெரிய அளவுக்கு சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக மாறி உள்ளது.
திருமாவளவன் ட்வீட் போட்டு விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார்.
இந்நிலையில், அவருக்கு அரசியல் கட்சியில் இருந்து எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வருவதாக பகிரங்கமாக ட்வீட் போட்டு எந்தவொரு மிரட்டலுக்கும் தான் பயப்படமாட்டேன் எனக் கூறி உள்ளார்.
அடுத்த
கொண்டாட்டத்திற்கு
தயாராகும்
ரசிகர்கள்..
மீண்டும்
மோதலில்
விஜய்
-அஜித்
படங்கள்?

அரசியல் ஆதரவு
இதுவரை மக்கள் ஆதரவு பெற்று வந்த பிக் பாஸ் போட்டியாளர் விக்ரமனுக்கு இறுதி நேரத்தில் அரசியல் கட்சியின் நேரடி ஆதரவு கிடைத்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வனிதா விஜயகுமார், பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்டோர் அரசியல் கட்சியின் தலைவரான திருமாவளவன் எப்படி விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

வனிதாவுக்கு மிரட்டல்
திருமாவளவன் செய்தது நியாயமில்லை என நேரடியாக ட்வீட் போட்டு விளாசிய வனிதா விஜயகுமாருக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் மிரட்டல்கள் வருவதாக கூறியுள்ளார். அவர் விமர்சனம் சொல்லி வரும் யூடியூப் சேனலுக்கு போன் போட்டு மிரட்டி உள்ளனர் என்றும் அதற்கெல்லாம் தான் பயப்பட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

எங்கிட்ட வச்சிக்காதீங்க
யாருக்கும் எதுக்கும் பயந்தவ நானில்லை.. உங்க அரசியல் புத்தி என்னன்னு காலம் காலமா பார்த்திருக்கோம்.. நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்க.. உங்க அரசியல் எல்லாம் எங்கிட்ட வச்சிக்காதீங்க என விளாசி உள்ளார் வனிதா விஜயகுமார்.

பிக் பாஸ் ஜெயிக்கிறதுக்கே அராஜகம்னா
ஒரு பிக் பாஸ் ஜெயிக்கிறதுக்கே அராஜகம்னா.. எலக்ஷன் வந்தா என்னன்ன செய்வாங்க.. இவங்கள மாதிரி அரசியல் கட்சிகள்.. அரசியல் எங்கே பண்ணனுமோ அங்கே பண்ணுங்க, நான் டிஸ்டர்ப் பண்ணல.. அதே போல எங்க என்டர்டெயின்மென்ட்ல வந்து நீங்க அரசியல் பண்ணாதீங்க என விளாசி உள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்
வனிதா விஜயகுமார் தன்னை ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மிரட்டுகின்றனர் என சொல்லி உள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும் அதே சமயம் விக்ரமன் வெற்றி பெறக் கூடாது என வனிதா வரிந்து கட்டிக் கொண்டு பேசுகிறார் என அவருக்கு எதிராகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.