கெட்ட போலீஸ் சார் இந்த வனிதா.. காக்கிச் சட்டையில் மிரட்டும் பிக் பாஸ் பிரபலம்.. என்ன மேட்டரு?

சென்னை: வழக்கறிஞர் கெட்டப் போட்டு ஒரு படத்தில் நடித்து வந்த வனிதா விஜயகுமார் அடுத்ததாக போலீஸ் கெட்டப்பில் மிரட்ட உள்ளார்.

சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த அவர் சின்னத்திரை, சினிமா என இப்பவும் பிசியாக நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார்.

விஜய்க்கு ஜோடி

விஜய்க்கு ஜோடி

1995ம் ஆண்டு வெளியான விஜய்யின் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா மாணிக்கம், தேவி, சும்ம நச்சுன்னு இருக்கு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் ஏகப்பட்ட புதிய படங்கள் டஜன் கணக்கில் உருவாகி வருகிறது.

மீண்டும் பிசி

மீண்டும் பிசி

குடும்ப பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்த வனிதா விஜயகுமார் தனது மகள்களை வளர்க்க வேண்டும் என பிக் பாஸ், சீரியல்கள் என சின்னத்திரையிலும், சினிமாவிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். பிரசாந்தின் அந்தகன், வாசுவின் கர்ப்பிணிகள், அனல் காற்று, சிவப்பு மனிதர்கள், தில் இருந்தா போராடு, காத்து, பிக்கப் டிராப் என பல படங்களில் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

போலீஸ் கெட்டப்பில்

போலீஸ் கெட்டப்பில்

இந்நிலையில், கேரளாவில் வனிதா விஜயகுமார் நடித்து வரும் புதிய படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கெட்ட போலீஸ்

கெட்ட போலீஸ்

மேலும், அந்த புகைப்படங்களுடன் கேப்ஷனாக கெட்ட போலீஸாக புதிய படத்தில் நடித்து வருகிறேன் என்பதையும் வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார். போலீஸ் உடையில் கம்பிரமாக வனிதா விஜயகுமாரை பார்த்த அவரது ரசிகர்கள் அப்படியே ஃபிட்டா போலீஸ் மாதிரியே இருக்கீங்க அக்கா என பாராட்டி வருகின்றனர்.

குவியும் ட்ரோல்கள்

குவியும் ட்ரோல்கள்

வனிதா விஜயகுமார் எந்தவொரு போஸ்ட் போட்டாலும், அதற்கு கீழ் ட்ரோல்களும் குவியத் தொடங்கி விடும். வனிதா விஜயகுமாரின் போலீஸ் கெட்டப் ரொம்பவே காமெடியாக இருப்பதாகவும், பாவம் அந்த பட்டன் எப்போடா கழண்டு விழும் என காத்திருக்கிறது என்று ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X