ரஜினி அங்கிள்.. அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை.. நடிகை வனிதா விஜயகுமார் ட்வீட்!

சென்னை: ரஜினிகாந்த் அங்கிள் சீக்கிரம் குணமாகி நலமுடன் இருந்தாலே போதும், அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை என நடிகை வனிதா விஜயகுமார் போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Recommended Video

Rajini uncle குணமடைய வேண்டும், கஷ்டமா இருக்கு | Filmibeat Tamil

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கடந்த டிசம்பர் 14ம் தேதி ஹைதராபாத் சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

படக்குழுவினருக்கு கொரோனா பரவிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஹைதராபாத்தில் அண்ணாத்த

ஹைதராபாத்தில் அண்ணாத்த

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறது. டிசம்பர் 12ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதரபாத்துக்கு விமானம் மூலமாக சென்று அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பை நிறுத்திய கொரோனா

படப்பிடிப்பை நிறுத்திய கொரோனா

அண்ணாத்த படக்குழுவினர் 8 பேருக்கு கொரோனா பரவியது உறுதியான நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக ஷூட்டிங்கை நிறுத்தியது. அண்ணாத்த படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் பரவின.

கொரோனா இல்லை

கொரோனா இல்லை

நடிகர் ரஜினிகாந்துக்கு என்ன ஆனது என்கிற பரபரப்பு கிளம்பிய நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு நெகட்டிவ் என வந்ததும் ரசிகர்களும், பிரபலங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலன் சரியில்லை என்கிற பேச்சுக்கள் அடிபட்டன.

அப்பல்லோவில் அனுமதி

அப்பல்லோவில் அனுமதி

இந்நிலையில், இன்று திடீரென ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு இருப்பதால் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என அப்பல்லோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

வரும் டிசம்பர் மாதம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட இந்த திடீர் உடல் நலக் குறைவால், ரசிகர்கள் ரொம்பவே வேதனை அடைந்துள்ளனர். ரசிகர்களும் சினிமா உலக பிரபலங்களும் சூப்பர்ஸ்டார் சீக்கிரமே குணமாகி வரவேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் அங்கிள்

ரஜினிகாந்த் அங்கிள்

இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார், ரஜினிகாந்த் அங்கிள் சீக்கிரமாக குணமடைந்து பழையபடி கம்பீரமாக எழுந்து வரவேண்டும் என தனது பிரார்த்தனையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2020ம் ஆண்டு முடிய இன்னும் ஒரு வார காலமே இருப்பதால், எந்த பிரச்சனையும் இன்றி ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பினால் போதும் என பதிவிட்டுள்ளார்.

அரசியல் வேண்டாம்

அரசியல் வேண்டாம்

மேலும், உங்கள் உடல் நலன் சீராக இருந்தாலே போதும் அங்கிள் நீங்கள் வீணாக அரசியலுக்கு வந்து கஷ்டப்படத் தேவையில்லை எனவும் தனது ட்விட்டர் பதிவில் நடிகை வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்தின் ரசிகர்களும் வனிதா விஜயகுமாரின் இந்த கருத்தை வரவேற்று வருகின்றனர். ரஜினிகாந்த்துக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் சிறிது நாட்கள் ஓய்வெடுத்தாலே போதும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X