Don't Miss!
- News
டெங்குவா? கொரோனாவா? குழம்பும் கோவை.. சிக்கன்குனியாவை தடுக்க புதுச்சேரி அரசின் சூப்பர் திட்டம்..!
- Finance
ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!
- Travel
மாலத்தீவுகளுக்கு சற்றும் குறைவில்லாத இந்த இந்திய நகரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
“நீ எப்போதுமே என்னுடைய லட்டு‘‘.. மகன் ஸ்ரீஹரிக்கு உருக்கமாக வாழ்த்து சொன்ன வனிதா !
சென்னை : நடிகை வனிதா, தனது மகன் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார்.
என்னது கேஜிஎஃப்-3 வர 8 ஆண்டு ஆகுமா?....பிரஷாந்த் நீலுக்கு உள்ள பிரச்சினை இதுதானா?
இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தனது அறிமுகத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்துள்ளார்.

வனிதா விஜயகுமார்
திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுக்கி இருந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதைபற்றியும் கவலைப்படாமல் இவர் தைரியமாக பேசியதே இவரின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் எனலாம்.

வைரல் ஸ்டார்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி, பிபி ஜோடிகள் பலவற்றில் புகுந்து விளையாடினார். சோஷியல் மீடியாவின் வைரல் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள வனிதா விஜயகுமார், அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

வனிதாவின் மகன் ஸ்ரீஹரி
வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடன் வளர்ந்து வருகிறார்கள்.

என்னுடைய லட்டு
இந்நிலையில், வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை பகிர்ந்து, என்னுடைய முதல் காதலே.. காதல் எப்போதும் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்பு என்பது மற்ற எந்த அன்பையும் விட பரிசுத்தமானது. நான் தாயாகி இன்று 21 ஆண்டு ஆகிறது. அதாவது என் முதல் குழந்தை ஸ்ரீஹரிக்கு இன்று 21வது பிறந்தநாள். திறமையான அழகான எனது மகன் ஸ்ரீஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீ எப்போதுமே என்னுடைய லட்டு. உன்னுடைய அனைத்து கனவுகளும் நிறைவேற கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என்று நடிகை வனிதா உருக்கமாகக பதிவிட்டுள்ளார்.