Jovika Birthday: நண்பர்களுடன் நைட் பார்ட்டி.. 20வது பிறந்த நாளை கொண்டாடிய ஜோவிகா!

சென்னை: வைரல் ஸ்டார் வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ஜோவிகா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அவரின் பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த போட்டோவை ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக விஜய்க்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின் ஒரு சில படத்தில் நடித்த வனிதாவிற்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அந்த திருமண வாழ்க்கையும் பிரச்சனையில் முடிய, பெற்றோருடன் சண்டை போட்டார். இதனால், விஜயகுமார், மஞ்சுளா இருவருமே வனிதாவை மகளாக பெத்ததை நினைத்து வருத்தப்படுகிறோம் என கண்ணீர் வீட்டு பேட்டி அளித்தனர்.

Vanitha Vijayakumar Jovika
Photo Credit:

வனிதா விஜயகுமார்: அதன் பின், குடும்பத்தோடு எந்தவிதமான உறவும் இல்லாமல், தனது இரண்டு மகளுடன் தனியாக வாழ்ந்த வந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று நன்றாக சமைத்து பெயர் எடுத்தார். இப்போது வனிதா விஜயகுமார் சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் வனிதா, ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். அந்த படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது. படம் பார்த்தவர்கள் இதெல்லாம் ஒரு படமா என திட்டி தீர்த்த நிலையில், வனிதா படத்தை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு தனக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொண்டார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்: மிஸஸ் அண்ட் மிஸ்டர் பட நிகழ்ச்சியில் பேசிய ஜோவிகா, இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு பெரிய காரணம் விஜய் தொலைக்காட்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன் என பெருமையாக பேசி இருந்தார். ஜோவிகா தயாரிப்பாளராக மிட்டுமில்லாமல் விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். கதாநாயகியாக இரண்டு படங்களில் கையெழுத்து போட்டு இருக்கிறார். இந்நிலையில ஜோவிகாவின் 20வது பிறந்த நாள் நேற்று நைட் பார்ட்டி வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில், ஜோவிகாவின் நண்பர்கள், வனிதாவின் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த போட்டோவை ஜோவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த பலர் இப்போ தான் ஜோதிகாவிற்கு 20 வயசு ஆகுதா என கேட்டு வருகின்றனர். ஜோவிகா தனது பிறந்த நாள் பார்ட்டியில் கருப்பு நிற ஸ்லீவ்லஸ் உடையில் இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X