Don't Miss!
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சர்வைவர் இம்யூனிட்டி சேலஞ்சில் வென்ற வனேசா...பரிசாக என்ன கிடைச்சது ?
சென்னை : சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கும் இந்த போட்டியில் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த போட்டி மொத்தம் 90 நாட்கள் நடைபெற உள்ளன. இதுவரை 7 பேர் எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளனர்.
5
மில்லியன்
வியூசை
கடந்த
ஷிவாங்கியின்
நோ
நோ
வீடியோ
ஆல்பம்
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 70 வது நாளை எட்டி உள்ளது. இதனை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். உமாபதி, விக்ரந்த், சிருஷ்டி டாங்கே, விஜயலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

சவால் விட்ட ஐஸ்வர்யா
இந்நிலையில் 70 வது நாளான நேற்றைய எபிசோடில் இம்யூனிட்டி சேலஞ்ச் நடத்தப்பட்டது. இதில் வனேசா அல்லது லேடிகாஷோ தனியாக நின்று ஜெயித்து காட்டட்டும் என ஐஸ்வர்யா சவால் விட்டார். இந்த சவாலை ஏற்று, இன்யூனிட்டி சேலஞ்ஜில் பங்கேற்றார் வனேசா.

க்ளூவை கண்டுபிடித்த இனிகோ
இம்யூனிட்டி ஐடல் க்ளூவை வைத்துக் கொண்டு விக்ராந்த்தும் இனிகோவும் தேடல் வேட்டைக்கு கிளம்பினார்கள். இனிகோ, ஒரு கட்டத்தில் மறைந்திருந்த குறிப்பைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அதில் எக்ஸ்பயரி தேதி இல்லை. "சூப்பர். அம்ஜத்தை முதல்ல தூக்கிட வேண்டியதுதான்" என்று இனிகோ உற்சாகப்பட "இதை நீயே பத்திரமா வெச்சுக்கோ" என்று இனிகோவிடம் கொடுத்து வைத்து விட்டார் விக்ராந்த்.

சவாலை விளக்கிய அர்ஜுன்
அர்ஜுன், இம்யூனிட்டி சவால் பற்றி விளக்க ஆரம்பித்தார். ஒரு seesaw பலகையின் மீது போட்டியாளர் பேலன்ஸ் செய்து ஏறி நிற்க வேண்டும். பிறகு தனது வலது கைபக்கத்தில் இருக்கும் ஏழு மரத்துண்டுகளை எடுத்து இடது பக்கத்தில் அடுக்க வேண்டும். இந்த வரிசை மூன்று விநாடிகளுக்கு மேல் நின்று விட்டால் அவர் வெற்றியாளர் என்று சொல்லி போட்டியை ஆரம்பிக்கத் துவங்கினார் அர்ஜுன்.

தள்ளாடிய போட்டியாளர்கள்
இதில் இனிகோவிற்கு ஆரம்பக்கட்டத்திலேயே வெற்றி கிடைத்தது. ஆனால் நாராயணனும் லேடிகாஷூம் இந்த ஆரம்ப முயற்சியிலேயே மிகவும் தள்ளாடினார்கள். விக்ராந்த், இனிகோ, லேடிகாஷ் போன்றவர்கள் ஐந்தாறு துண்டுகளை மட்டும் எப்படியோ அடுக்கி விட்டு சமாளிக்க முயன்றாலும் அது முடியவில்லை. அவை சரிந்து கீழே விழுந்தன.

சேலஞ்ச், வாளை வென்ற வனேசா
வனேசா ஏழு துண்டுகளையும் அடுக்கி வைத்து, மூன்று விநாடிகளுக்கு மேல் துண்டுகள் விழாமல் இருந்ததால் அவர் இந்த சவாலில் வெற்றி பெற்றார். வனேசாவை வாழ்த்திய அர்ஜுன், அவருக்கு இம்யூனிட்டி வாளை அளித்தார். இந்த வாரம் வனேசாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது.