வந்தா ‘பிரச்சினையோடத்’ தான் வருவேன்... விஆர்வி டிரெய்லரிலேயே ஆரம்பித்த சிம்பு!

சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை: சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாத்தான் வருவேன் பட டிரெய்லர் ரிலீசாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். இப்படத்தில் மகத், மேகா ஆகாஷ், ரம்யா கிருஷ்ணன், கேத்ரினா தெரசா, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

ஹிப் ஆப் ஆதி இசையமைக்க, கே. செல்வபாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி அமர்நாத் எடிட்டிங் செய்ய ஸ்ரீகாந்த் கலை அமைத்துள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 1-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு திரையிட்டனர். படத்தை பார்த்த அதிகாரிகள் 'யு' சான்று வழங்கி உள்ளனர்.

டிரெய்லர் ரிலீஸ்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்றுள்ள `எனக்கா ரெட் கார்டு... எடுத்துப்பார் ரெக்கார்டு' என்ற பாடல் வீடியோ வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில், காமெடி, காதல், சென்டிமெண்ட் என எல்லாம் நிறைந்து ரசிகர்களுக்கு படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அரசியல் டயலாக்:

அரசியல் டயலாக்:

ஏற்கனவே தனது பட ரிலீசின் போது, தனது கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் பண்ணாதீர்கள், பண்ணுங்கள் என மாற்றி மாற்றி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சிம்பு. இந்த சூழ்நிலையில், இந்த டிரெய்லரில் சில காட்சிகளில் அரசியல் வசனம் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சிம்பு.

இலவச விளம்பரம்:

இலவச விளம்பரம்:

அதாவது, ‘அம்மாவிற்கு பிறகு நான்தான் என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்' என ஒரு காட்சியில் அவர் கூறுகிறார். இதன் மூலம் அவர் யாரை மறைமுகமாக விமர்சிக்கிறார் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விரைவில் இதற்கு அவர்களும் பதிலடி கொடுப்பார்கள். எனவே, படத்தில் நிச்சயமாக இலவச விளம்பரம் இப்போதே கன்பார்ம்.

வரவேற்பு:

வரவேற்பு:

மற்றொரு காட்சியில் ‘கெத்து தான் என் சொத்து' என்கிறார் சிம்பு. இதன் மூலம் அவர் சினிமாவில் தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மறைமுக சவால் விடுக்கிறார் என்கின்றனர் அவரது ரசிகர்கள். இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்களிடையே இந்த டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X