twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீரெட்டி பட தலைப்புக்கு எதிர்ப்பு!

    ரெட்டி டைரி தலைப்புக்கு வாராகி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

    |

    சென்னை: ரெட்டி டைரி திரைப்பட தலைப்புக்கு தடைவிதிக்க வேண்டுமென தயாரிப்பாளர் வாராகி கோரியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு நடிகர்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இப்போது அவருடைய நடிப்பில் ரெட்டி டைரி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.

    Varahi against Reddy dairy title!

    ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் கதையமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அலாவுதீன் இயக்குகிறார்.

    தற்போது ரெட்டி என்ற பெயரை படத்தின் தலைப்பிற்கு பயன்படுத்த கூடாது என தயாரிப்பாளர் வாராகி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பிலிம் சேம்பரில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    அதில், ஸ்ரீரெட்டி திரையுலகில் உள்ள முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி அதன் மூலம், பணம் பறிப்பது மற்றும் சினிமா வாய்ப்பு பெறுவது போன்ற செயல்களில் இறங்கியுள்ளதாக தெரிவதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும், ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை நிகழ்வுகளை படமாக எடுப்பதிலும், அதில் ஸ்ரீரெட்டி நடிப்பதிலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ரெட்டி டைரி என்று பெயர் வைத்து ஒரு சமுதாயத்தினரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிச்சயம் இப்படம் குறிப்பிட்ட சமுதாயத்தினரை பெருமைபடுத்தும் விதமாக இருக்காது எனத் தெரிகிறது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக இருக்கக் கூடாது என்றும், அதனால் ரெட்டி டைரி என்ற டைட்டிலை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தனிப்பட்ட முறையில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும், சமூக நலன் கருதியே இந்த கோரிக்கையை வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Producer Varahi requested Tamil film chamber and Producer council noty to allow Reddy dairy title for Srireddy biopic. As he mentioned, it will defame a particular community.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X