»   »  வாராகி கொலை மிரட்டல் விடுத்தார் யுவர் ஆனர்: ஹைகோர்ட்டில் விஷால் மனு

வாராகி கொலை மிரட்டல் விடுத்தார் யுவர் ஆனர்: ஹைகோர்ட்டில் விஷால் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் வாராகி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைத்த பணத்தில் ரூ.3 கோடி ஊழல் நடந்துள்ளது என்று நடிகர் வாராகி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் மறுத்திருந்தார்.

இந்நிலையில் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

வாராகி

எங்கள் சங்க உறுப்பினர் வாராகி, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சில விவரங்களைக் கேட்டு சில மாதங்களுக்கு முன்பு மனு அனுப்பினார். அது குறித்து விளக்கம் அளிப்பதற்காக ஆகஸ்ட் 27-ம் தேதி சங்கத்திற்கு வரும்படி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

விளக்கம்

விளக்கம்

அதன்படி, சங்க செயல்பாடுகள் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளிப்பதற்காக அந்த தேதியில் சங்கத்தின் மூன்று செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் சங்கத்தில் காத்திருந்தனர். ஆனால் சங்க அலுவலகத்துக்கு வந்த வாராகி அங்கிருந்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்ட ஆலோசகரிடம் எதுவும் பேச முடியாது என்று கூறியதுடன், நிர்வாகிகளிடம் மட்டுமே பேசுவேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார். சங்க அலுவலகத்துக்கு வெளியே பேட்டியும் கொடுத்தார்.

மிரட்டல்

மிரட்டல்

அப்போது சங்க அலுவலக வாசலை மறைத்தபடி நிற்க வேண்டாம் என்று சொன்னதற்கு வாராகியும் அவருடன் வந்தவரும் எங்களை மிரட்டினார்கள். அதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, சங்கத்தின் சார்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸ்

போலீஸ்

சங்கத்தின் புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, வாராகி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதமாகக் கூடுதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

English summary
Actor Vishal has filed a petition in Chennai high court seeking it to order police to file case against actor Varahi for threatening to kill Nadigar sangam functionaries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil